News December 22, 2025

அடுத்த 2 மணிநேரம் தூங்காதீங்க..

image

இந்தாண்டின் கடைசி வானியல் நிகழ்வான ‘உர்சிட் விண்கல் மழை’ பொழிவை இன்றிரவு வானில் காணலாம். இது ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 17 – 26 தேதிகளுக்கு இடையில் நிகழ்கிறது. 8P/டட்டில் என்ற வால் நட்சத்திரம், சூரியனுக்கு அருகில் கடந்து செல்லும்போது, அது உருகி, நெருப்புக் கோள்களைப் போல பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழைகிறது. இந்தியாவில் ஒளி மாசுபாடு இல்லாத தெளிவான வானில் இந்த அற்புதக் காட்சியை காண முடியும்.

Similar News

News December 24, 2025

இன்னும் 6 நாள்களே.. பான் கார்டு வேலை செய்யாது!

image

வரும் ஜனவரி 1-ம் தேதிக்குள் ஆதார் – பான் கார்டை இணைக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இணைக்கத் தவறினால், ஜனவரி 1, 2026 முதல் உங்கள் பான் கார்டு செயல்பாட்டை இழந்து (inoperative) விடும். மேலும், செயலற்ற பான் எண்ணை மீண்டும் செயல்பட வைக்க, ₹1,000 அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். எனவே, உடனே பான் – ஆதாரை இணைத்து விடுங்கள். இந்த அத்தியாவசிய பதிவை அனைவருக்கும் பகிருங்கள்.

News December 24, 2025

BREAKING: தமிழகத்தை உலுக்கிய வழக்கில் தீர்ப்பு

image

நெல்லையில், 14 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரத் தந்தைக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மாநிலத்தையே உலுக்கிய இவ்வழக்கில் 7 மாதங்களில் தீர்ப்பு அளித்துள்ள நெல்லை போக்சோ கோர்ட், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு TN அரசு ₹10 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பெற்ற மகளை பாதுகாக்க வேண்டிய தந்தையே அவரை சிதைப்பது சமூகத்தில் மன்னிக்க முடியாத குற்றம் என நீதிபதி கூறியுள்ளார்.

News December 24, 2025

மனதை உலுக்கிய கூட்ட நெரிசல் மரணங்கள்.. REWIND 2025

image

ஏனோ 2025 இந்தியாவில் பெரும் சோகங்களை கொடுத்துவிட்டது. பல இடங்களிலும் மக்கள் கொத்து கொத்தாக மரணித்தனர். அப்படி கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்த துயர நினைவுகளை மேலே கொடுத்துள்ளோம். போட்டோவை வலது பக்கமாக Swipe செய்து அவற்றை பார்க்கவும். இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும், இவை மறக்க முடியாத வடுவாக மக்களின் மனதில் இருக்கும்.

error: Content is protected !!