News January 7, 2026

அடுத்த விண்வெளி புரட்சிக்கு தயாராகும் இந்தியா!

image

பெங்களூருவில் உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனமான ‘OrbitAID Aerospace’ புதிய வரலாறு படைக்க உள்ளது. விண்வெளியிலேயே செயற்கைக்கோள்களுக்கு எரிபொருள் நிரப்பும், இந்தியாவின் முதல் ‘AayulSAT’ செயற்கைக்கோளை உருவாக்கியுள்ளது. இதனை, வரும் 12-ம் தேதி இஸ்ரோ விண்ணில் ஏவ உள்ளது. இதன் மூலம், செயற்கைக்கோள்களின் ஆயுட்காலத்தை அதிகரிப்பதோடு, ஏவுதலுக்கான செலவுகளையும், விண்வெளி குப்பைகளையும் குறைக்கலாம்.

Similar News

News April 14, 2026

சிலிண்டர் வைத்திருப்போருக்கு எச்சரிக்கை

image

வீடுகளிலும் ஹோட்டல்களிலும் பயன்படுத்தும் கேஸ் சிலிண்டருக்கு காலாவதி தேதி உண்டு. அதற்குள் கேஸை பயன்படுத்திவிட வேண்டும். சிலிண்டர் மீது அந்த தேதி குறிப்பிடப்பட்டிருக்கும். A-27, B-28, C-29, D-30 என்று இருந்தால் A: ஜன-மார், B: ஏப்-ஜூன், C: ஜூலை-செப், D: அக்- டிசம்பர் என்று பொருள். எண்கள் ஆண்டை குறிக்கிறது. A-27 என்றால் மார்ச் 2027 வரை இது பாதுகாப்பானது என்று அர்த்தம். பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.

News April 14, 2026

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை குறைகிறது REASON

image

ஏப்.19, ஞாயிற்றுக்கிழமையன்று அட்சய திருதியை கொண்டாடப்படும் நிலையில், காலை, மாலை இரு வேளைகளிலும் விலை மாற்றம் இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். தற்போதைய சூழலில் தங்கத்தின் விலையை ஈரான் போரே தீர்மானிக்கிறது. எனவே, போர் முடிவுக்கு வந்தால் அன்றைய நாளில் தங்கம் விலை உயருமாம். அதேநேரம், அன்றைய தினத்திற்குள் போர் முடிவடையவில்லை எனில் தங்கம் விலை குறையும் என கூறுகின்றனர்.

News April 14, 2026

லோக் சபா தொகுதிகள் 850 ஆக உயர்கிறது

image

தொகுதி மறுவரையறைக்கு பிறகு லோக் சபா தொகுதிகள் 543-ல் இருந்து 850 ஆக உயரும் என தகவல் வெளியாகியுள்ளது. மாநிலங்களுக்கு 815 தொகுதிகளும், யூனியன் பிரதேசங்களுக்கு 35 தொகுதிகளும் ஒதுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. மகளிருக்கான 33% இட ஒதுக்கீட்டை செயல்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில், தொகுதி மறுவரை மசோதா உள்ளிட்ட மசோதாக்கள், ஏப்.16-ல் தொடங்கும் சிறப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படவுள்ளன.

error: Content is protected !!