News August 28, 2024
அடுத்த மாதம் மாநகராட்சி கூட்டம் நடத்த முடிவு

காஞ்சிபுரம் மாநகராட்சியில் புதிதாக இணைந்த செவிலிமேடு, ஓரிக்கை போன்ற பகுதிகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு திட்டம் செயல்படுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். இதற்காக வரும் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் மாநகராட்சி கூட்டம் கட்டாயம் நடக்கும் என காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி கூறியுள்ளார். மேலும், கவுன்சிலர்கள் ஒத்துழைப்பு கொடுப்பார்கள் என எதிர்பார்க்கிறோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Similar News
News August 25, 2025
காஞ்சிபுரம்: +2 போதும், ரூ.81,100 சம்பளத்தில் வேலை!

எல்லை பாதுகாப்பு படையில் (BSF) ஹெட் கான்ஸ்டபிள் பிரிவில் ரேடியோ ஆப்பரேட்டர், ரேடியோ மெக்கானிக் பதவிக்கு 1121 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு +2 மற்றும் ITI படித்த 18 முதல் 25 வயதுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு சம்பளமாக ரூ.25,500-81,100 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் செப்டம்பர் 23ம் தேதிக்குள் <
News August 25, 2025
காஞ்சிபுரம்: போனில் மூழ்கிய மாணவன் தூக்கிட்டு தற்கொலை!

காஞ்சிபுரம், சோமங்கலம் அருகே வசித்து வருபவர் சரவணன். இவரது மகன் கோகுல் அதே பகுதியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக கோகுல் பள்ளிக்கு செல்லாமல் போனில் கேம் விளையாடி கொண்டிருந்தார். இதனை அவரது தாயார் கண்டித்துள்ளார். இதனால் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கோகுல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சோமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News August 25, 2025
காஞ்சிபுரத்தில் நாளை மின்தடை!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை (ஆகஸ்ட் 25) மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, களியாம்பூண்டி மற்றும் மாகரல் துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளான திருப்புலிவனம் அழிசூர் களியாம்பூண்டி, மருதம், சிலாம்பாக்கம், மானம்பதி, உத்திரமேரூர் & சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.