News November 23, 2025
அடிக்காமலே அலறும் திமுக: விஜய் பாய்ச்சல்!

காஞ்சிபுரத்தில் மக்களை சந்தித்த விஜய் திமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார். பவள விழா பாப்பா, நீ பாசாங்கு காட்டாதே பாப்பா என பாடி கலாய்த்த அவர், பாப்பா என சாஃப்டாக தான் விமர்சனம் செய்ததாகவும் விளக்கமளித்தார். அத்துடன், இன்னும் விமர்சிக்க ஆரம்பிக்கவே இல்லை, அடிக்க ஆரம்பிக்கவே இல்லை எனவும் அதற்குள் அலறுனா எப்படி என்றும் கிண்டலாக கேள்வி எழுப்பியுள்ளார்.
Similar News
News January 21, 2026
TCL உடன் கைகோர்த்த சோனி

சோனி தனது டிவி மற்றும் ஹோம் என்டர்டெயின்மென்ட் பிரிவை மேம்படுத்த சீன நிறுவனம் TCl உடன் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளது. இதில் TCL 51% பங்கையும், சோனி 49% பங்கையும் வைத்திருக்கும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டுத் முயற்சியின் மூலம் Sony Bravia டிவி தயாரிப்பு, விற்பனை மற்றும் பிற செயல்பாடுகளை உலகமெங்கும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
News January 21, 2026
ஜனவரி 21: வரலாற்றில் இன்று

*1924 – சோவியத் தலைவர் விளாடிமிர் லெனின் மறைந்தார். *1945 – இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் ராஷ் பிஹாரி போஸ் மறைந்தார். *1972 – திரிபுரா, மேகாலயா, மணிப்பூர் ஆகியவை இந்தியாவின் தனி மாநிலங்களாக்கப்பட்டன. *2009 – செம்மொழித் தமிழ் உயராய்வு மையம் அமைக்கப்பட்டது. *2017 – தமிழ்நாடு முழுவதும் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டங்கள் உச்சத்தை எட்டியது.
News January 21, 2026
இணையதளங்களின் வர்த்தகத்தை பாதிக்கும் AI

கூகுள் தேடல் மூலம் இணையதளங்களுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறதாம். தற்போது, தேடல் தொடர்பான தகவல்கள், AI உதவியுடன் சுருக்கமாக வருகிறது. இதனால், பயனர்கள் இணையதளங்கள் உள்ளே செல்வதற்கான தேவை குறைகிறது. இந்நிலையில், Google Search Traffic அடுத்த 3 ஆண்டுகளில் 40% குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறைவதால் இணையதளங்களின் வர்த்தகம் பாதிப்படையும்.


