News January 14, 2026
அடக்குமுறையின் உச்சத்தில் திமுக அரசு: சீமான்

கறிக்கோழி பண்ணை விவசாயிகளுக்கு ஆதரவாக போராடிய ஈசன் முருகசாமி உட்பட 9 பேரை திமுக அரசு விடுவிக்க வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். பட்டப்பகலில் கொலை, பாலியல் வன்கொடுமை செய்வோரை கைது செய்யாத திமுக அரசு, அப்பாவி விவசாயிகள் மீது பொய் வழக்கு போடுவதாக அவர் X-ல் சாடியுள்ளார். இது அடக்குமுறையின் உச்சம் என்று குறிப்பிட்டுள்ள சீமான், அவர்களுக்கு எதிரான வழக்கை திரும்பபெற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
Similar News
News February 11, 2026
கோழிக்கறி சாப்பிடும் போது உஷார்!

கோழி இறைச்சி பலருக்கும் பிடித்த உணவாக இருந்தாலும், அதன் சில குறிப்பிட்ட பாகங்களை தவிர்க்க வேண்டும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். கோழியின் நுரையீரல் பகுதியில் ஒட்டுண்ணிகள் இருக்கக்கூடும்; கோழியின் தீவனத்தில் பூச்சிக்கொல்லி கலந்திருந்தால், அதன் தலையில் நச்சுக்கள் தேங்கியிருக்கும்; அதேபோல், கோழியின் கால்களில் பாக்டீரியாக்கள் இருக்கக்கூடும். இவை உடல்நல பிரச்னைகளுக்கு வழிவகுக்கலாம்.
News February 11, 2026
அங்கன்வாடி பள்ளிகளுக்கு 1 மாதம் விடுமுறை

அங்கன்வாடி பள்ளிகளுக்கு கோடை விடுமுறையை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, மே 1 முதல் 31-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஒரு மாதத்திற்கு தேவையான சத்துமாவினை கணக்கிட்டு விடுமுறைக்கு முன்பாகவே குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் எனவும் ஊழியர்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. கோடை விடுமுறைக்கு ரெடியாகிக்கோங்க வாண்டு பசங்களே!
News February 11, 2026
நடிகை நந்தினி தற்கொலை.. உருக்கமான PHOTOS

‘கௌரி’ சீரியல் <<18705027>>நடிகை நந்தினி<<>> தற்கொலை செய்து கொண்டது, சின்னத்திரை ரசிகர்களை உலுக்கியது. இந்நிலையில், மறைவுக்கு முன் இன்ஸ்டாவில் அவர் பதிவிட்டிருந்த போட்டோக்கள், தற்போது வைரலாகி வருகின்றன. ரசிகர்கள் பலரும், நந்தினியின் போட்டோக்களுக்கு RIP, MISS U என உருக்கமாக பதிவிட்டு வருவதே அதற்கு காரணம். அவர் உயிருடன் இருந்தபோது ஹார்ட்டின் விட்ட பதிவுகள், இப்போது கண்ணீர் அஞ்சலியால் நிரம்பி இருப்பது பெரும் சோகம்.


