News February 20, 2025
அஞ்சல் துறையில் வேலை: உடனே அப்ளை பண்ணுங்க

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் 59 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். <
Similar News
News September 29, 2025
செங்கல்பட்டில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் (டாஸ்மாக்) கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், அவற்றை ஒட்டியுள்ள மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல் மதுக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சினேகா அறிவித்துள்ளார். அன்றைய தினம் திறந்திருக்கும் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
News September 29, 2025
மாவட்ட போக்குவரத்து காவல்துறை முக்கிய அறிவிப்பு

ஆயுத பூஜை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு, செங்கல்பட்டு வழியாக தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பொதுமக்கள், படாளம்-புக்கத்துறை பகுதிகளில் மேம்பாலப் பணி நடப்பதால், அவ்வழியைத் தவிர்க்க வேண்டும். இது தொடர்பாகக் காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வாகன நெரிசலைத் தவிர்க்க, பயணிகள் மாற்று வழியில் பயணம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
News September 29, 2025
செங்கல்பட்டு: கண் நோயை குணமாகும் சீனிவாச பெருமாள்

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள செம்மஞ்சேரி கிராமத்தில் அமைந்துள்ளது 1500 ஆண்டுகள் பழமையான செம்மஞ்சேரி சீனிவாச பெருமாள் கோயில். இங்குள்ள சீனிவாச பெருமாளை வணங்குவதன் மூலம் கண் தொடர்பான பிரச்சினைகள் குணமடைவதாக நம்பப்படுகிறது. ஒரு பல்லவ மன்னன் தனது இழந்த பார்வையை இங்கு வழிபட்டு மீண்டும் பெற்றதாகத் தல புராணம் கூறுகிறது. இன்றும் பலர் கண் சம்பந்தமான கோளாறுகளுக்கு இங்கு வந்து வழிபடுகிறார்கள். ஷேர் பண்ணுங்க