News February 3, 2025
அஞ்சல் துறையில் ஓட்டுநர் வேலை

அஞ்சல் துறையில் தமிழ்நாட்டில் உள்ள 25 ஓட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் சேலத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்டவுள்ளது. இதற்காக https://www.indiapost.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்தும், The Senior Manager, Mail Motor Service, No.37, Greams Road, Chennai 600006 முகவரிக்கு தபால் வழியாகவும் அனுப்பலாம். கடைசி தேதி 8.2.2025.
Similar News
News July 8, 2025
இந்தியாவிலேயே தமிழகத்திற்கு தான் ஐ.நா விருது கிடைத்துள்ளது!

“இந்திய மருத்துவத்துறை வரலாற்றில் ஒரு மாநிலத்தில் ஒரு துறைக்கு ஐ.நா. விருது கிடைக்கப் பெற்றுள்ளது
தமிழகத்திற்கு தான். இந்தியா முழுவதும் விபத்தில் சிக்கும் மக்களுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்காக அடித்தளமிட்டவர் தமிழக முதலமைச்சர் தான்” என சேலத்தில் நடந்த விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு!
News July 7, 2025
சேலம் மாவட்ட விவசாயிகளின் கவனத்திற்கு!

சேலம் மாவட்ட விவசாயிகள் விளைபொருட்களை விற்க ஒவ்வொரு வட்டாரத்திலும் பொது சேகரிப்பு மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். கூடுதல் விவரங்களுக்கு தங்கள் அருகில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களையோ அல்லது சேலம் உத்தமசோழபுரத்தில் அமைந்துள்ள சேலம் விற்பனைக் குழு தலைமை அலுவலகத்தையோ தொடர்பு கொள்ளலாம்.
News July 7, 2025
சேலம் மாநகர இரவு ரோந்து போலீசார் விவரம்!

சேலம் மாநகரில் இன்று (ஜூலை 07) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ளது. ஊரகம், சங்ககிரி, ஆத்தூர், மேட்டூர், வாழப்பாடி ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரை புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு மாநகர கட்டுப்பாட்டு எண்: 0427-2273100 அழைக்கலாம்.