News December 20, 2025
அஜித் ரசிகர்களுக்கு நியூ இயரில் ட்ரீட்

ரேஸிங்கில் அஜித் பிஸியாக உள்ள நிலையில் அவரது படங்களுக்கு ரசிகர்கள் ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர். சமீபத்தில் ரீ-ரிலீஸான அட்டகாசம் படம் அவரது ரசிகர்களுக்கு சின்ன கொண்டாட்டத்தை கொடுத்தது. அதைவிட மாஸாக கொண்டாடும் வகையில் ‘மங்காத்தா’ ரீ-ரிலீஸூக்கு தயாராகியுள்ளது. ஜன.23-ம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ளதாக சினிமா வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.
Similar News
News February 5, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால்
▶இயல்: அரசியல்
▶அதிகாரம்: மடியின்மை
▶குறள் எண்: 602
▶குறள்:
மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்.
▶பொருள்: குலம் சிறக்க வேண்டுமானால், சோம்பலை ஒழித்து, ஊக்கத்துடன் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
News February 5, 2026
ஹிந்தி திணிப்பு கிருமியை கட்டுப்படுத்தணும்: கனிமொழி

சிவகாசி ரயில் நிலைய பெயர்ப்பலகையில், தமிழ் எழுத்துக்களை மாற்றி ஹிந்தியை இடம்பெறச் செய்தது சர்ச்சையாகியுள்ளது. தனது X பதிவில் கனிமொழி, சென்னை பூங்கா ரயில் நிலையத்தைத் தொடர்ந்து தற்போது சிவகாசியிலும் ஹிந்தியை முதன்மைப்படுத்தி பெயர்ப்பலகை வைக்கப்பட்டுள்ளதாக சாடியுள்ளார். மேலும், நோய்த்தொற்றை போல ஊரெங்கும் பரவிடும் ஹிந்தி திணிப்புக் கிருமியைக் கட்டுப்படுத்தியாக வேண்டும் என தெரிவித்துள்ளார்.
News February 5, 2026
திமுக அரசின் ₹700 கோடி ஊழல்: அன்புமணி

திருவான்மியூர்-உத்தரண்டி 4 வழி உயர்மட்ட சாலை ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாக அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார். ₹2,100 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை ஐதராபாத் நிறுவனத்திற்கு DMK அரசு வழங்கியதாகவும், ஆனால் ₹700 கோடி குறைவாக கோரப்பட்ட ஒப்பந்தபுள்ளியை திட்டமிட்டு நிராகரித்துள்ளனர் எனவும் சாடியுள்ளார். இதன் பின்னணியில் ஊழல் நடந்திருப்பதை யூகிக்க முடிவதால், CBI விசாரணை தேவை என்று வலியுறுத்தியுள்ளார்.


