News December 21, 2025

அஜித் ரசிகர்களுக்கு ஒரு இனிப்பான அப்டேட்!

image

அஜித்தின் கார் ரேஸிங் ஆவணப்படத்தை ஏ.எல்.விஜய் இயக்கிவருகிறார். இந்நிலையில் இதற்கு சாம் CS இசையமைக்கவுள்ளார் என பேசப்படுகிறது. சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், அஜித்துடன் 100% பணியாற்றுகிறேன். அது என்ன என்பது பற்றி விரைவில் தெரியவரும் என ஹிண்ட் கொடுத்திருந்தார். இதனால் இவர்தான் டாக்குமெண்ட்ரிக்கு இசையமைக்கிறார் என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Similar News

News December 30, 2025

FLASH: சென்னையில் மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு!

image

சென்னை மெட்ரோ ரயிலில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்ட்ரல் & கோயம்பேடு வழியாக விமான நிலையத்திற்குச் செல்லும் நேரடி ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பசுமை வழித்தடம் (அண்ணா நகர், கோயம்பேடு) வழியாக விமான நிலையம் செல்லும் பயணிகள், அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ நிலையத்தில் ரயிலை மாற்றி நீல வழித்தட சேவைகளைப் பயன்படுத்துமாறு மெட்ரோ நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

News December 30, 2025

பொங்கல் பரிசுத்தொகை.. ஸ்வீட்டான செய்தி வந்தது

image

புத்தாண்டு பிறக்கவுள்ள நிலையில், விரைவில் பொங்கல் பரிசுத்தொகை தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், 2.22 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க தலா 22,291 மெட்ரிக் டன் பச்சரிசி & சர்க்கரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தலா 1.77 கோடி வேட்டி & சேலைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதால், பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன.

News December 30, 2025

அதிமுக அடிமை கட்சி தான்: அண்ணாமலை

image

‘அதிமுக அடிமை கட்சி’ என CM ஸ்டாலின் விமர்சித்திருந்தார். இதற்கு பதிலளித்துள்ள அண்ணாமலை, ‘என்னை பொறுத்தவரை அதிமுகவும் அடிமை தான், NDA கூட்டணியும் அடிமை தான். யாருக்கு அடிமை? மக்களுக்கு அடிமை’ என்று குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டு மக்களை எஜமானர்களாக நினைத்து, அவர்களுக்காக சேவை செய்யும் கூட்டணியை அடிமை என சொன்னால், அதை பெருமையாக நினைத்து வேலை செய்வோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!