News January 29, 2026
அஜித் பவார் இடத்தை பிடிக்கப் போவது யார்?

தேசியவாத காங்கிரஸில் இருந்து பிரிந்து, பாஜக கூட்டணியில் இணைந்து துணை முதல்வர் ஆனவர் அஜித் பவார். எனினும் மீண்டும் சரத் பவாருடன் இணைவதற்கான பேச்சுவார்த்தைகள் சமீபத்தில் எழுந்தன. இந்நிலையில் எதிர்பாரா விதமாக அஜித் பவாரின் திடீர் மரணம் அக்கட்சியில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது. இதனையடுத்து அக்கட்சியின் தலைவர் பதவி ரேஸில் யார் யார் இருக்கிறார்கள் என்பதை வலது பக்கம் Swipe செய்து பாருங்க..
Similar News
News February 1, 2026
இந்திய ரூபாய் தாளின் ரகசியம் தெரியுமா?

இன்றைய தினம், மத்திய பட்ஜெட் மீதுதான் பலரின் கவனம் இருக்கும். இந்நிலையில், ரூபாய் நோட்டு குறித்த தகவல் ஒன்றை அறிவோம். ரூபாய் நோட்டு காகிதத்தால் ஆனது கிடையாது. லினன் & பருத்தியால் தான் இவை தயாரிக்கப்படுகின்றன. 75% பருத்தி, 25% லினன் என்ற காம்போவில் உருவாக்கப்பட்டு, அவை ஜெலட்டின் பிசின் கரைசலுடன் கலக்கப்படுகின்றன. இதன் காரணமாகவே ரூபாய் நோட்டுகள் நீண்ட காலம் கிழியாமல் இருக்கின்றன. SHARE IT.
News February 1, 2026
தமிழை காக்கும் மோடி; அழிக்கும் ஸ்டாலின்: தமிழிசை

தமிழ் கலாச்சாரம் அழிய சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் வழிவகுத்ததாக திருமாவளவன் கூறிய கருத்துக்கு தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளார். PM மோடி இந்தியா முழுவதும் தமிழ் கற்க வேண்டும் என கூறும் நிலையில், தமிழ்நாட்டை சேர்ந்த CM ஸ்டாலின், திருமாவளவன் ஆகியோர் தமிழின் பெருமையை இழக்க செய்கிறார்கள் என குற்றம்சாட்டினார். <<19017609>>டிடிவி தினகரன் <<>>உள்ளிட்டோரும் திருமாவளவனுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
News February 1, 2026
SBI வங்கியில் 2,273 வேலை.. Apply பண்ணுங்க

SBI கிளைகளில் உள்ள 2,273 வட்டார அளவிலான அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் ஒரு வணிக வங்கி அல்லது பிராந்திய கிராமப்புற வங்கியில் 2 ஆண்டுகள் அதிகாரி நிலையில் பணி செய்திருக்க வேண்டும். ஆன்லைன் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். அடிப்படை ஊதியம், இதர படிகளை சேர்த்து சம்பளமாக ₹90,000 வழங்கப்படும். பிப்.18-க்குள் <


