News January 22, 2026
அஜித் குமார் மரணம்.. புதிய தகவல் வெளியானது

கோயில் காவலாளி அஜித் குமார், போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. இவ்வழக்கில் சிறையில் இருக்கும் காவலர்கள் தற்போது ஜாமின் கோரி மதுரை ஐகோர்ட்டை நாடியுள்ளனர். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஜாமின் வழங்க ஐகோர்ட் மறுப்பு தெரிவித்தது. மேலும், நிகிதாவின் நகை திருட்டு வழக்கின் நிலை குறித்து சிபிஐ விசாரணை அதிகாரி விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
Similar News
News January 28, 2026
நெல்லை: ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை !APPLY NOW

நெல்லை மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை சிகிச்சை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் இணைய விரும்புவோர் குடும்ப அட்டை, ஆதார் மற்றும் வருமானச் சான்றிதழுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மையத்தில் பதிவு செய்து அடையாள அட்டை பெற்றுக்கொள்ளலாம். கூடுதல் தகவல்களுக்கு 1800 425 3993 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.
News January 28, 2026
ராமதாஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை: தவெக

அதிமுக கூட்டணியில் அன்புமணியும், திமுக கூட்டணியில் விசிகவும் ராமதாஸ் தரப்பை இணைக்க மறுப்பு தெரிவித்து வருவதாக தகவல் வெளியாகிறது. இதனிடையே, தவெக தரப்பில் ராமதாஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இதுவரை ராமதாஸ் தரப்பு உள்பட எந்த கட்சியுடனும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை என தவெக நிர்வாகி கூறியுள்ளார்.
News January 28, 2026
கூட்டணி கட்சிகளால் திமுகவுக்கு நெருக்கடியா?

பிப். 3-ம் தேதிக்கு பிறகு கூட்டணி கட்சிகளிடம் பேச்சுவார்த்தையை தொடங்க திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணியில் உள்ள காங்கிரஸ்(25), விசிக(6), CPI(6), CPM(6) உள்ளிட்ட கட்சிகள் இம்முறை அதிக சீட்டுகளை கேட்க திட்டமிட்டுள்ளதால், அது திமுகவுக்கு நெருக்கடியை அதிகரிக்கலாம். கமலின் மநீம கட்சியும் அதிக தொகுதிகளை கேட்பதால் இம்முறை DMK போட்டியிடும் இடங்கள் கடந்த முறையைவிட குறைய வாய்ப்புள்ளது.


