News December 20, 2025

அஜித் குமார் மரணம்.. பரபரப்பான புதிய தகவல்

image

தமிழகத்தை உலுக்கிய அஜித் குமார் கொலை வழக்கில் 10 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், காவலர்கள் ராஜா & பிரபு ஆகியோர் ஜாமின் கோரி மதுரை HC அமர்வில் மனுதாக்கல் செய்துள்ளனர். அதில், தங்களுக்கும் இதற்கும் தொடர்பில்லாத நிலையிலும் 168 நாள்களுக்கும் மேலாக சிறையில் உள்ளதால் ஜாமின் வழங்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர். இதனை விசாரித்த HC, இதுதொடர்பாக CBI பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

Similar News

News December 21, 2025

டிரம்ப் போட்டோ மாயம்!

image

ஜெஃப்ரி <<18548710>>எப்ஸ்டீன்<<>> தொடர்பான ஆவணங்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. அதில் டிரம்ப், பில் கிளிண்டன், பில் கேட்ஸ் போன்ற பல பிரபலங்களின் போட்டோக்கள் இருந்தன. ஆனால், வெளியிட்ட 24 மணி நேரத்திற்குள் டிரம்ப் இருக்கும் போட்டோ உள்ளிட்ட 16 முக்கிய கோப்புகள் இணையதளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளன. இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த ஆவணங்கள் ஏன் நீக்கப்பட்டன என ஜனநாயக கட்சியினர் கொந்தளித்து வருகின்றனர்.

News December 21, 2025

விஜய் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்

image

தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது. ஒருபுறம் கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாகியுள்ள நிலையில், மறுபுறம் மாற்றுக்கட்சியினரை இணைக்கும் பணிகளும் வேகமெடுத்துள்ளன. இந்நிலையில், தவெகவை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர், கோவை வடக்கு மாவட்ட பாஜக, சமூக ஊடகப்பிரிவு மாவட்டச் செயலாளர் சுரேஷ்குமார் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளனர்.

News December 21, 2025

கண்ணில் மிளகாய் பொடி தூவி மாணவனுக்கு சித்ரவதை!

image

கர்நாடகா, பாகல்கோட் பகுதியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவனிடம் மிருகத்தனமாக நடந்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாற்றுத்திறனாளி பள்ளியில், 16 வயது சிறுவனை Plastic pipe-ஆல் அடித்து, கண்ணில் மிளகாய் பொடியை தூவி சித்ரவதை செய்துள்ளனர். தன்னை காக்க முடியாத அச்சிறுவனை நினைத்து பார்க்கும் போது நெஞ்சம் பதறுகிறது. ஏன் ஆசிரியர்கள் இவ்வாறு செய்தார்கள் என்பது தெரியாத நிலையில், விசாரணை நடந்து வருகிறது.

error: Content is protected !!