News December 15, 2025
அஜித் குமார் மரணம்.. பரபரப்பான புதிய தகவல்

திருப்புவனம் கோயில் காவலாளி அஜித் குமார் கொலை வழக்கில், 6 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். 7-வது குற்றவாளியாக மானாமதுரை DSP சண்முக சுந்தரம் சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில், திருப்புவனம் இன்ஸ்பெக்டர் ரமேஷ், SI சிவக்குமார், தலைமை காவலர் இளையராஜா பெயரும் சேர்க்கப்பட்டிருப்பது சிபிஐ குற்றப்பத்திரிகையில் தெரியவந்துள்ளது. இதன்மூலம், குற்றஞ்சாட்டப்பட்ட போலீசாரின் எண்ணிக்கை 10-ஆக அதிகரித்துள்ளது.
Similar News
News December 19, 2025
விஜய்யின் பேச்சு.. ஏமாற்றத்தில் தவெக தொண்டர்கள்

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விஜய் வாய் திறக்கவில்லை என அரசியல் கட்சிகள் சாடியிருந்தன. மேலும், தேசிய அளவில் எதிரொலிக்கும் MGNREGA திட்டத்திற்கு மாற்றான <<18571984>>VB-G RAM G<<>> மசோதா பற்றியாவது ஈரோடு கூட்டத்தில் அவர் பேசுவார் என மக்களும், TVK தொண்டர்களும் எதிர்பார்த்தனர். ஆனால், எத்தனை நிமிடங்கள் பேசணும், எதை பேசணும் என்பது தனக்கு தெரியும் என விஜய் கூறினார். இதனால் TVK தொண்டர்கள் ஏமாற்றமடைந்துள்ளனராம்.
News December 19, 2025
டிச.24-ல் தமிழகம் முழுவதும் போராட்டம்

MGNREGA-க்கு மாற்றாக கொண்டுவந்துள்ள VB-G-RAM-G மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி வரும் 24-ம் தேதி திமுக கூட்டணி சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. TN முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் நடத்த உள்ளன. 100 நாள் வேலைத்திட்டத்தை அழிக்கும் நோக்கில் மத்திய அரசு செயல்படுவதாகவும் திமுக கூட்டணி குற்றம்சாட்டியுள்ளது. உங்கள் கருத்து?
News December 19, 2025
மீண்டும் சூடுபிடிக்கும் கோடநாடு வழக்கு!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 3 பேருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீலகிரி கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பு, CBCID போலீசார் ஆஜராகினர். ஆனால், தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகிய 3 பேர் ஆஜராகாததால் அவர்களுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி முரளிதரன் உத்தரவிட்டுள்ளார். கோடநாடு வழக்கின் விசாரணை மீண்டும் சூடுபிடித்துள்ளது.


