News December 17, 2025
அஜித்குமார் மரணம்.. அதிர்ச்சியூட்டும் புதிய தகவல்

சிவகங்கை, திருப்புவனம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு தமிழகத்தையே உலுக்கியது. இவ்வழக்கில், A7 ஆக <<18544051>>DSP<<>> சண்முகசுந்தரம் சேர்க்கப்பட்டார். இதனையடுத்து, அவர் முன்ஜாமின் கோரி மதுரை HC அமர்வில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், இதன் மீதான விசாரணையின் போது, DSP சண்முகசுந்தரத்தை கைது செய்து விசாரிக்கவுள்ளதாக CBI கூறியுள்ளது. இதனால், விரைவில் அவர் கைதாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News December 18, 2025
‘பராசக்தி’ வெறும் அரசியல் படம் மட்டுமில்லை

மொழிப் போராட்டத்தை மையப்படுத்தியே பராசக்தியின் கதைக்களம் அமைந்திருந்தாலும், அதில் வேறு சில எமோஷனல் விஷயங்களும் இருப்பதாக இயக்குநர் சுதா கொங்கரா தெரிவித்துள்ளார். இரு சகோதரர்களின் (SK & அதர்வா) பாசமும், வெவ்வேறு சித்தாந்தங்களை பின்பற்றும் அவர்களுக்கு இடையேயான மோதலும் படத்தில் எமோஷனலாக கூறப்பட்டுள்ளதாம். வரும் ஜனவரி 14-ம் தேதி ‘பராசக்தி’ வெளியாகவுள்ளது.
News December 18, 2025
BREAKING: மக்களுக்கு வாக்குறுதி கொடுத்தார் விஜய்

எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்த இந்த விஜய்யை மக்கள் ஒருநாளும் கைவிட மாட்டார்கள் என்று ஈரோடு பரப்புரைக் கூட்டத்தில் விஜய் தெரிவித்துள்ளார். உங்களை நம்பித்தான் அரசியலுக்கு வந்து இருக்கிறேன்; என்னுடன் கடைசி வரை நிற்பீர்கள் என எனக்குத் தெரியும். அதேபோல், தமிழக மக்களுக்காக வாழ்நாள் முழுவதும் நன்றியுடன் உழைப்பேன் என்று வாக்குறுதி அளித்துள்ளார்.
News December 18, 2025
நாளைய தமிழகமே விஜய்தான்: KAS

நாளை தமிழ்நாட்டை ஆளப்போவது விஜய்தான் என்று ஈரோடு பரப்புரைக் கூட்டத்தில் செங்கோட்டையன் சூளுரைத்துள்ளார். இது சாதாரணமாக கூடிய கூட்டம் அல்ல, எதிர்கால தமிழகத்தை உருவாக்க கூடிய கூட்டம் எனக் கூறிய அவர், ஆண்டுக்கு 500 கோடி ரூபாயை விட்டுவிட்டு மக்களுக்கு சேவை செய்ய விஜய் வந்துள்ளார். அவர் (விஜய்) கை நீட்டும் நபர்கள்தான் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவார்கள் என்று தெரிவித்தார்.


