News July 6, 2025
அச்சரபக்கம் ஏரியை காணவில்லை – மக்கள் கவலை

அச்சரப்பாக்கம் ஏரி பல ஆண்டுகளாக எந்த பராமரிக்கும் இல்லாததால் செடி கொடிகள் முட்கள் காடுகளாக மாறி காட்சியளிக்கிறது. இந்த இடம் சமூக விரோதிகளால் ஆக்கிரமிப்புகள் செய்யும் இடமாக மாறிவிட்டது. நீர்நிலை பறவைகள் சரணாலயமாக இருந்த இடம், அரசு கவனக்குறைவால் இப்படி மாறிவிட்டதை கண்டு பொது மக்கள் மிகவும் கவகையில் உள்ளனர். அரசு இதனை சரி செய்தால், சுற்றுலாத்தலமாக மாறலாம் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
Similar News
News September 28, 2025
செங்கல்பட்டு: TNSTC சூப்பர் அறிவிப்பு..உனனே APPLY பண்ணுங்க

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சென்னை,விழுப்புரம் போன்ற 6 மண்டலங்களில் 1,588 பயிற்சிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொறியியல் பட்டதாரிகள் (மாதம் ரூ.9,000) & டிப்ளமோவுக்கு (மாதம் ரூ.8,000) உதவித்தொகை வழங்கப்படும். கலை, அறிவியல், வணிகப் பிரிவுகளில் பட்டப்படிப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். <
News September 28, 2025
செங்கல்பட்டு: TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு!

செங்கல்பட்டு மாவட்டத்தில், TNPSC சார்பில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு இன்று (செப்.28) நடைபெறுகிறது. தேர்வு எழுத வரும் தேர்வர்கள், காலை 8.30 மணிக்குள் தேர்வுக்கூடத்திற்கு வந்துவிட வேண்டும். ஹால் டிக்கெட் மற்றும் புகைப்பட அடையாள அட்டையுடன் வருவது கட்டாயம். மின்னணு சாதனங்களுக்கு அனுமதி இல்லை. தேர்வு எழுத கருப்பு நிற மை பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தேர்வு எழுத செல்வோருக்கு ஷேர் பண்ணுங்க
News September 27, 2025
செங்கல்பட்டு: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக காவல்துறை இன்று இரவு ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு, மாமல்லபுரம், மற்றும் மதுராந்தகம் ஆகிய மூன்று வட்டங்களுக்குட்பட்ட ஒன்பது காவல் நிலையங்களில், துணை காவல் கண்காணிப்பாளர் (DSP) தலைமையில் காவல்துறையினர் ரோந்து செல்லவுள்ளனர்.