News April 6, 2025

அச்சமின்றி தர்ப்பூசணி பழத்தை சாப்பிடலாம்

image

காஞ்சிபுரம் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் லட்சுமி, “தர்ப்பூசணியில் நிறத்திற்காக, ஊசி போடுவதாக வதந்தி எழுந்தது. காஞ்சிபுரத்தில் ஆய்வு செய்தபோது, இதுபோன்ற செயல்கள் எதுவும் நடக்கவில்லை. தர்ப்பூசணி பழங்களில், ‘லைக்கோபின்’ எனும் சிவப்பு நிறம் இயற்கையாகவே இருப்பதால், இனிப்பு மற்றும் நிறம் குறித்து, எவ்வித அச்சமும் இன்றி தர்ப்பூசணி பழத்தை பொதுமக்கள் வாங்கி சாப்பிடலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 6, 2025

காஞ்சி மாவட்ட மக்களுக்கு தெரிய வேண்டிய எண்கள்

image

காஞ்சி மாவட்ட ஆட்சியரக உதவி எண்-044 – 27237424, 27237425, ஆட்சியரக கட்டுப்பாட்டு அறை -1077, மாநில கட்டுப்பாட்டு அறை-1070, போலீஸ் கட்டுப்பாட்டு அறை-100, விபத்து உதவி-108, தீயணைப்பு உதவி-101, ஆம்புலன்ஸ் உதவி-102, குழந்தை பாதுகாப்பு-1098, பாலின துன்புறுத்தல்-1091, BSNL-1500, டெங்கு காய்ச்சல் உதவி-8098160003, பேரிடர் மீட்பு-04177 -246269, 9442105169. *மிக முக்கிய எண்களான இவற்றை நண்பர்களுக்கு பகிரவும்

News April 6, 2025

காஞ்சிபுரம் கோட்டம் முதலிடம்

image

காஞ்சிபுரம் அஞ்சலக கோட்டத்தின் கீழ், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய தலைமை தபால் நிலையங்கள், 54 துணை அஞ்சலகங்கள், 273 கிளை தபால் நிலையங்கள் உள்ளன. இங்கு தொடர் வைப்பு கணக்கு, பொன்மகன் வைப்பு நிதி உள்ளிட்ட திட்டங்கள் உள்ளன. இந்நிலையில், காஞ்சிபுரம் அஞ்சல் கோட்டம், பல வித அஞ்சல் கணக்குகள் தொடங்குவதில் முன்னிலை வகித்து வருகிறது. குறிப்பாக, சென்னை மண்டலத்தில் காஞ்சிபுரம் கோட்டம் முதல் இடம் பிடித்துள்ளது.

News April 6, 2025

மீனாட்சி அலங்காரத்தில் பத்ரகாளியம்மன்

image

காஞ்சிபுரம் வணிகர் வீதி அருகிலுள்ள பத்ரகாளியம்மன் கோவிலில், நவராத்திரி விழா கடந்த மார்ச் 30ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து, தினமும் மாலை 6 மணிக்கு அம்மன் பல்வேறு அலங்காரங்களில் அருள்பாலித்து வருகிறார். 7ஆம் நாள் விழாவான நேற்று முன்தினம் ஏப்ரல் 4ஆம் தேதி, மதுரை மீனாட்சியம்மன் அலங்காரத்தில் அம்மன் எழுந்தருள, திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். கோவில் வளாகம் பக்தர்களால் களைகட்டியது.

error: Content is protected !!