News December 28, 2025

அசாமில் 10.5 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

image

அசாமில் SIR பணிக்கு பிறகு இன்று ECI வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டது. இதில், ​​இறந்தவர்கள், குடியேறியவர்கள் மற்றும் நகல் வாக்காளர்கள் என 10,56,291 பேர், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். தற்போது மாநிலத்தில் மொத்தம் 2.51 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில், இறுதி வாக்காளர் பட்டியல் 2026 பிப்ரவரியில் வெளியிடப்படும்.

Similar News

News January 17, 2026

தமிழ் இயக்குநர்கள் தெலுங்கு பக்கம் தாவ இதுவா காரணம்?

image

அட்லியை தொடர்ந்து தற்போது லோகேஷும், அல்லு அர்ஜுன் நடிப்பில் புதிய படத்தை இயக்க உள்ளார். இதற்கிடையே, ஜூனியர் NTR நடிப்பில் நெல்சன் புதி படம் ஒன்றை இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழில் பெரும் சம்பளம் கொடுக்க தயாரிப்பாளர்கள் தயங்குவதாலும், தெலுங்கில் ₹75 கோடி முதல் ₹100 கோடி வரை சம்பளம் கொடுக்க தயாரிப்பாளர்கள் முன்வருவதாலும், தமிழ் இயக்குநர்கள் இத்தகைய முடிவை எடுப்பதாக கூறுகின்றனர்.

News January 17, 2026

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: ஒற்றாடல் ▶குறள் எண்: 583 ▶குறள்: ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன் கொற்றங் கொளக்கிடந்தது இல். ▶பொருள்: எல்லார் இடத்தும் நிகழ்வனவற்றை ஒற்றரைக் கொண்டு அறிந்து, நடப்பை தெரிந்து கொள்ளாத ஆட்சி, நிலைத்து வெற்றி பெற வேறொரு வழியே இல்லை.

News January 17, 2026

IND vs NZ: அணியில் அதிரடி மாற்றம்

image

NZ-க்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் 2 வீரர்களை BCCI மாற்றியுள்ளது. அதன்படி, வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக ரவி பிஷ்னோய், திலக் வர்மாவுக்கு பதிலாக ஸ்ரேயஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்திய அணி: சூர்யா (C), அபிஷேக், சாம்சன், ஸ்ரேயஸ், ஹர்திக், துபே, அக்சர், ரிங்கு, பும்ரா, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப், குல்தீப், வருண், இஷான், ரவி பிஷ்னோய். 5 போட்டிகளை கொண்ட இந்த தொடர் 21-ம் தேதி தொடங்குகிறது.

error: Content is protected !!