News September 23, 2025
அங்கீகரிக்கப்படாத கட்சிகள் நேரில் ஆஜராக உத்தரவு!

சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளதாவது, சேலம் மாவட்டத்தில் அங்கீகரிக்கப்படாத தேசிய மக்கள் கழகம் உள்பட 2 அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளும் அறிவிப்பில் குறிப்பிட்ட தேதியில் தலைமைத் தேர்தல் அலுவலர், தலைமைச் செயலகத்தில் விசாரணைக்காக ஆஜராகி உரிய ஆவணங்களுடன் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 23, 2025
சேலம் வழியாக சென்னைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

நவராத்திரி விழாவை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக சேலம் வழியாக கோவை-சென்னை சென்ட்ரல் இடையே வாராந்திர சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது சேலம் ரயில்வே கோட்டம். அதன்படி, வரும் செப்.28 முதல் அக்.12 வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக இயக்கப்படும் சிறப்பு ரயில் சேலம் ரயில் நிலையத்தில் 10 நிமிடங்கள் நின்றுச் செல்லும். முன்பதிவு நாளை (செப்.24) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
News September 23, 2025
சேலம்: திருக்குறள் திருப்பணி பயிலரங்கம்

சேலம் மாவட்ட தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில், திருக்குறள் திட்டத்தின் கீழ் திருக்குறள் பயிற்சி மற்றும் பயிலரங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் இன்று துவங்கியது. இந்த பயிலரங்கத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி துவக்கி வைத்தார். அக்டோபர்-6ம் தேதி முதல் வாரம்தோறும் சனிக்கிழமை காலை 9 மணி முதல் 12 மணி வரை நடைபெறும், இந்த பயிலரங்கத்தில் அனைத்து தரப்பினரும் கலந்துகொண்டு பயனடையலாம் என்றார்.
News September 23, 2025
சேலம்: மாமன்ற கூட்டம் ஆணையாளர் அறிவிப்பு!

சேலம் மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்; வருகின்ற செப்-25ஆம் தேதி வியாழக்கிழமை பகல் 11 மணி சேலம் மாநகராட்சி மாதாந்திர இயல்பு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த மாமன்ற கூட்டத்தில் மாநகராட்சியின் அனைத்து உறுப்பினர்களும் பங்கு ஏற்று தங்களது கோட்டங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், மற்றும் குறைகளை தெரிவிக்க வேண்டும், என்று வலியுறுத்தியுள்ளார்.