News August 17, 2025
அங்காளம்மன் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம்

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் எழுந்தருளியுள்ள அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவில் வருகின்ற ஆக.22ம் தேதி இரவு 10:30 மணி அளவில் ஆவணி அமாவாசை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. அன்று அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகம் செய்து அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட உள்ளதால் பக்தக் கோடிகள் அனைவரும் திரளாக கலந்துக்கொள்ளலாம். அங்காலம்மன் பக்தர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
Similar News
News August 17, 2025
விழுப்புரம்: திடீர் மின்தடையா ? உடனே CALL பண்ணுங்க!

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே 9498794987 என்ற பிரத்யேக TNEB சேவை எண் பயன்பாட்டில் உள்ளது . இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE
News August 17, 2025
விழுப்புரம்: இலவச AI பயிற்சி… கைநிறைய சம்பளம்

விழுப்புரத்தில் AI படிக்க விரும்பும் இளைஞர்களுக்கு செம வாய்ப்பு. வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு திறன் சார்ந்த பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு 12th, டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு முடித்த 18 – 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். AI டெவலப்பர், டேட்டா அனலிஸ்ட் ஆகிய பதவிகளில் ரூ.4.5 லட்சம் சம்பளத்தில் வேலை பெறலாம். விருப்பமுள்ளவர்கள் <
News August 17, 2025
விழுப்புரம்: பாமக தலைவராக ராமதாஸ் தேர்வு

விழுப்புரத்தில் இன்று(ஆக.17) நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கட்சியின் தலைவராக தொடர்வார் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பொதுக்குழுவில் பங்கேற்றவர்கள் எழுந்து நின்று கரங்களை தட்டி ஆதரவு தெரிவித்தனர். மேலும் 2026 தேர்தல் கூட்டணி குறித்து பேச ராமதாசுக்கு மட்டுமே அங்கீகாரம் வழங்கி பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.