News April 23, 2025

அங்கன்வாடி வேலை: இன்றே கடைசி நாள்

image

சென்னை மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 184 அங்கன்வாடி பணியிடங்கள், 22 குறு அங்கன்வாடி பணியிடங்கள், 102 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நியமனம் செய்யப்பட உள்ளன. பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 25-35 வயதுடைய 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இன்றைக்குள் இந்த <>லிங்கை <<>>க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

Similar News

News April 23, 2025

இலவச கோடைகால வாலிபால் பயிற்சி

image

நெல்கலை பிரண்ட்ஸ் வாலிபால் கிளப் சார்பில், 41ஆவது ஆண்டுக்கான கோடைக்கால வாலிபால் பயிற்சி முகாம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி தொடங்குகிறது. இந்த முகாமானது, எழும்பூர் ராதாகிருஷ்ணன் அரங்கில் காலை 6.30 மணிக்கு நடைபெறும். இதில், 12 – 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் பங்கேற்கலாம். முன்பதிவு தேவையில்லை. பயிற்சி நாளன்று தங்கள் பெயரை பதிவு செய்யலாம். மேலும் தகவலுக்கு 93822 07524 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

News April 23, 2025

குறைகளை ‘TN SMART’ தளத்தில் புகாராக அளிக்கலாம்

image

சென்னை மாவட்ட பொதுமக்கள், தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளை ‘<>TN SMART<<>>’ இணையதளத்தில் புகாராக பதிவு செய்யலாம். இதற்கு, ‘புகார் பதிவு’ என்பதை க்ளிக் செய்து, உங்கள் பெயர், முகவரி, மொபைல் எண், புகார் விவரம் மற்றும் அதன் புகைப்படத்தை சமர்ப்பிக்கவும். அவசர நிலைகளுக்கு 1070 அல்லது 1077-ஐ அழைக்கவும். உங்கள் புகாரின் நிலை மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

News April 23, 2025

கோடைகால இலவச பயிற்சி: கலெக்டர்

image

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம மாவட்ட அளவிலான கோடைக்கால பயிற்சி முகாம், வரும் வரும் ஏப்.25ஆம் தேதி முதல் மே.15ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. முற்றிலும் இலவசமாக நடைப்பெறும் இப்பயிற்சி முகாமில், 18 வயதுக்கு உட்பட்டோர் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசியிலோ (7401703480) தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். ஷேர் செய்யுங்கள்

error: Content is protected !!