News April 7, 2025
அங்கன்வாடி வேலைவாய்ப்பு, ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகளின் கீழ் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 124 அங்கன்வாடி பணியாளர்கள், 29 குறுஅங்கன்வாடி பணியாளர், 145 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளது. தகுதி உடையவர்கள் வரும் 23ஆம் தேதிக்குள் www.icdstn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என தெரிவித்துள்ளார்.
Similar News
News April 12, 2025
தஞ்சை: திடீர் மின்தடையா ? இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க!

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE!
News April 12, 2025
தஞ்சையில் ஆதார் சிறப்பு முகாம்

தஞ்சை கோட்ட முதுநிலை தபால் கண்காணிப்பாளர் தங்கமணி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சித்திரை திருவிழாவையொட்டி ஆதார் மற்றும் சர்வதேச தபால் சேவை சிறப்பு முகாம் வருகிற 15ஆம் தேதி தொடங்கி 30ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதன்படி தஞ்சை கோட்டத்தில் உள்ள தஞ்சை, மன்னார்குடி, பாபநாசம் தலைமை தபால் அலுவலகங்கள் மற்றும் ஆதார் சேவை மையம் உள்ள துணை தபால் அலுவலகங்களில் நடக்கிறது.
News April 12, 2025
தஞ்சை: டிகிரி முடித்தவர்களுக்கு வேலை

தஞ்சையில் உள்ள தனியார் நிறுவனத்தில் Assistant Manager பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சி துறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ரூ.15,000 ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் இங்கே <