News April 5, 2025
அங்கன்வாடி மையங்களில் 306 காலி பணியிடங்கள் அறிவிப்பு

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் அங்கன்வாடி பணியாளர் 98 பேர், அங்கன்வாடி உதவியாளர் 208 பேர் என மொத்தம் 306 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு படித்த பெண்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் சிவ சவுந்தரவல்லி அறிவித்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் <
Similar News
News April 6, 2025
சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு

சென்னை உயர்நீதிமன்றத்தில் சோப்தார், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 392 பணியிடங்கள் உள்ளன. ரூ.15,700 – ரூ.58,100 சம்பளம் வழங்கப்படும். 8 முதல் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். விருப்பமுள்ளவர்கள் இந்த லிங்கை <
News April 6, 2025
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 22 ஆண்டு சிறை

கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி சையத் லியாகத் அலி (52). இவர் திருப்பத்துாரில் தங்கி, பணியாற்றி வந்தார். இவர் கடந்த, 2022 அக்., 7ல், 4 வயது சிறுமியை வீட்டிற்கு கடத்தி வந்து, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அவரை, வாணியம்பாடி அனைத்து மகளிர் போலீசார், போக்சோவில் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மீனாகுமாரி, அவருக்கு 22 ஆண்டுகள் சிறை, 7,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
News April 6, 2025
கடன் தொல்லையால் பெண் தூக்கிட்டு தற்கொலை

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே நாயனத்தியூர் பகுதியை சேர்ந்தவர் அன்பரசன். இவரின் மனைவி சோபிகா (40). இந்நிலையில் அன்பரசன் உடல்நலம் பாதித்து கடந்த 6 மாதங்களாக படுத்த படுக்கையாக உள்ளார். இதனால் சோபிகா
போதிய பணம் இல்லாமல் தவித்து வந்தார். கணவனின் மருத்துவ செலவிற்கு நிறைய கடன்பெற்ற நிலையில் கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டுள்ளனர். இதனால் மனமுடைந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.