News April 17, 2025

அங்கன்வாடி பணி: விண்ணப்பிப்பது எப்படி?

image

திருவள்ளூரில், 369 அங்கன்வாடி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பதாரர்கள், இந்த லிங்கை <>க்ளிக் <<>>செய்து விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து, வரும் 23ஆம் தேதிக்குள் தங்களது வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். கணவனை இழந்த அல்லது ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 18 – 40 வயதுடைய பெண்கள் விண்ணப்பிக்கலாம். ஷேர் செய்யுங்கள்

Similar News

News April 19, 2025

1,166 கோடி ரூபாய் மதிப்பிலான விழா

image

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல் 18) நடந்த அரசு விழாவில், முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். 390 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். 418 கோடி ரூபாய் மதிப்பிலான கட்டடங்களை திறந்து வைத்தார். மேலும். 2.02 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ஒட்டுமொத்தமாக 1,166 கோடி ரூபாய் மதிப்பிலான விழாவாக இந்த விழா அமைந்தது.

News April 18, 2025

திருவள்ளூர்: இருதய நோயை குணப்படுத்தும் கோவில்

image

திருவள்ளூர், திருநின்றவூரில் அமைந்துள்ளது அருள்மிகு இருதயாலீஸ்வரர் கோவில். இந்த கோவிலில் திங்கட்கிழமைகளில் வந்து பயபக்தியுடன் பிரார்தனை செய்தால் எப்பேர்பட்ட இதய நோயானாலும் குணமாகும் என பக்தர்கள் தீர்க்கமாக நம்புகின்றனர். சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்ட டாக்டர்கள் தங்கள் நோயாளிகள் குணமாக இங்கு வந்த பிரார்த்னை செய்கிறார்கள் எனவும் தகவல் உள்ளது. *நீங்களும் கண்டிப்பா போங்க. நண்பர்களுக்கும் பகிரவும்

News April 18, 2025

திருவள்ளூர் மாவட்டத்திற்கு 5 புதிய திட்டங்கள்

image

கடம்பூர், தண்டலம் சாலையில் கூவம் ஆற்றில் ரூ.20 கோடியில் உயர்மட்ட பாலம் கட்டப்படும். திருவாலங்காடு கொசஸ்தலை ஆற்றில் ரூ.23 கோடியில் உயர்மட்ட பாலம் கட்டப்படும். காக்களூர், தாமரைக்குளத்தில் ரூ.2 கோடியில் திட்டம் மேற்கொள்ளப்படும். பழவேற்காடு ஏரியில் சூழலியல் சுற்றுலா வசதி ஏற்படுத்தப்படும். திருமழிசை – ஊத்துக்கோட்டை சாலை ரூ.51 கோடியில் அகலப்படுத்தபடும் என CM தெரிவித்துள்ளார். *நண்பர்களுக்கும் பகிரவும்*

error: Content is protected !!