News April 7, 2025

அங்கன்வாடி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

image

தர்மபுரி மாவட்டத்தில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளர்கள், குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளன. <>இந்த லிங்கை<<>> கிளிக் செய்து ஏப்ரல் 23ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். இதற்கு 25-35 வயதுடைய 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்கள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

Similar News

News January 27, 2026

தருமபுரி: குளிரால் ஏற்படும் முகவாதம் -உஷார்!

image

தருமபுரி உட்பட தமிழகம் முழுவதும் இரவு நேரங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. குளிர்ந்த தரையில் படுத்து உறங்கினால் முகவாதம் நோய் வருவதற்கான சாத்திய கூறுகள் அதிகம் என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. முகம் ஒரு பக்கம் தொங்குதல், சிரிக்க முடியாமை, கண் மூடுவதில் சிரமம், கண் வறட்சி அல்லது சுவை மாற்றம், காதுக்கு பின்னால் வலி, பேச்சில் தடுமாற்றம் இருந்தால் உடனே டாக்டரை அணுகுங்கள். SHARE IT!

News January 27, 2026

தருமபுரியில் மின் தடை; உங்க ஏரியா இருக்கா?

image

தருமபுரி நகரம் மற்றும் சோலைக்கொட்டாய் துணை மின் நிலையங்களில் இன்று (ஜன.27) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் மதிகோண்பாளையம், கோட்டை, தருமபுரி பேருந்து நிலையப் பகுதிகள், கடைவீதி, அன்னசாகரம், கொளகத்தூா், குண்டல்பட்டி, ஏ. ஜெட்டி அள்ளி, ஏ.ரெட்டி அள்ளி, செட்டிக்கரை, வெள்ளோலை, கோம்பை, மொடக்கேரி, நூலஅள்ளி, குப்பூா், சோலைக்கொட்டாய், நாயக்கன அள்ளி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யபடுகிறது.

News January 27, 2026

தருமபுரி: தறிகெட்டு ஓடிய பைக்; பறிபோன உயிர்!

image

திருவண்ணாமலையை சேர்ந்த தொழிலாளி மணிகண்டன் (26). இவர், தருமபுரி, கல்லாடிப்பட்டியில் தங்கி வேலை செய்து வந்தார். இந்நிலையில் மணிகண்டன் பைக் ஓட்ட ரமேஷ் பின்னால் அமர்ந்து லிங்காபுரம் நோக்கி சென்றனர். இதில் கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையோர மரத்தில் மோதியது. இதில் படுகாயம் அடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து அரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!