News April 7, 2025
அங்கன்வாடி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

திருவண்ணாமலையில் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 42 அங்கன்வாடி பணியிடங்கள், 04 குறு அங்கன்வாடி பணியிடங்கள், 47 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நியமனம் செய்யப்பட உள்ளன. பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 25-35 வயதுடைய 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்கள் விண்ணப்பம் செய்யலாம். 23ஆம் தேதிக்குள் <
Similar News
News January 2, 2026
தி.மலை: தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை!

செய்யாறு, வாழ்க்குடையை சேர்ந்தவர் விஷ்ணு (27) இவருக்கு திருமணமாகி மோனிஷா என்கிற மனைவியும் 3 மாத கைக்குழந்தையும் உள்ளனர். இந்நிலையில், இருவருக்குள்ளேயும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் நடந்த பிரச்னையில், மோனிஷா தனது தந்தை வீட்டுக்கு சென்றுள்ளார். இதனால் மனவேதனையில் இருந்த விஷ்ணு நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். செய்யாறு போலீசார் விசாரிக்கின்றனர்.
News January 2, 2026
தி.மலை: பைக்கில் தடுமாறி விழுந்தவர் பலி!

செய்யாறு, உக்கல் கிராமத்தை சேர்ந்தவர் பார்த்தீபன் (23) இவர் செய்யாறு சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் டிச.21 ஆம் தேதி வேலைக்கு செல்ல பைக்கில் சென்ற போது, நிலைத் தடுமாறி கீழே விழுந்துள்ளார். சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து தூசி போலீசார் விசாரிக்கின்றனர்.
News January 2, 2026
தி.மலையில் கரண்ட் கட்!

கீழ்பென்னாத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை (ஜன.3) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக கீழ்பென்னாத்தூர், கரிக்கலாம்பாடி, கணியாம்பூண்டி, ராயம்பேட்டை, சிறுநாத்தூர், மேக்களூர், நல்லான்பிள்ளைப்பெற்றாள், சோமாசிபாடி, கடம்பை, சோ.காட்டுகுளம், ஆராஞ்சி, காட்டுவேளானந்தல் & அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணி வரை மிதடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.


