News February 27, 2025
அங்கன்வாடி பணியாளரை பணியிடை நீக்கம் செய்த ஆட்சியர்

சீர்காழி அருகே அங்கன்வாடி மையத்தில் உணவு இடைவெளியின் போது 3 1/2 வயது சிறுமி பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டு தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் மகாபாரதி சம்பந்தப்பட்ட அங்கன்வாடி மைய பணியாளர் வசந்தி மற்றும் குழந்தைகள் மைய உதவியாளர் சுந்தரி ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News March 3, 2026
மயிலாடுதுறை: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

மயிலாடுதுறை மக்களே, உணவு பொருட்களுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதேபோல், நீங்கள் சிலிண்டர் வாங்கும்போது உட்புறத்தில் A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar),
B – (Apr/May/Jun),
C – (Jul/Aug/Sep),
D – (Oct/Nov/Dec),
காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!
News March 3, 2026
மயிலாடுதுறை: ரூ.50,500 சம்பளத்தில் அரசு வேலை

மத்திய அரசு நிறுவனமான BSNL-இல் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 120
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.24,900 – ரூ.50,500
5. கல்வித்தகுதி: B.E/B.Tech, CA/CMA
6. கடைசி தேதி: 07.03.2026
7. விண்ணப்பிக்க: <
மற்றவர்களும் பயன்பெற இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News March 3, 2026
மயிலாடுதுறை: +2 தேர்வில் 177 பேர் ஆப்சென்ட்

மயிலாடுதுறை மாவட்டத்தில் +2 அரசு பொது தேர்வு நேற்று முதல் தொடங்கியது. மாவட்டத்தில் 41 தேர்வு மையங்களில் நடைபெற்றது. 4847 மாணவர்கள் 5662 மாணவிகள் என மொத்தம் 10,509 மாணவ, மாணவிகள் நேற்று பொதுத்தேர்வு எழுதினர் விண்ணப்பித்தவர்களில் 177 பேர் தேர்வு எழுத வரவில்லை. 10 பறக்கும் படைகள் 38 நிலையான படைகள் 13 வழிதட அலுவலர்கள் 41 முதன்மை கண்காணிப்பாளர்கள் 41 துறை அலுவலர்கள் தேர்வுப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.


