News March 17, 2025
அங்கன்வாடியில் ரூ.24,200 சம்பளத்தில் அரசு வேலை!

தமிழ்நாடு முழுவதும் அங்கன்வாடி பணியாளர்களை நிரப்புவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. மொத்தம் 7,783 அங்கான்வாடி பணியாளர்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளனர்.அதிகபட்சம் 12ஆம் வகுப்பும் குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பும் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.வயது 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு கிடையாது.ரூ.24,200 வரை சம்பளம். மேலும் தெரிந்து <
Similar News
News September 16, 2025
BREAKING: திருப்பத்தூர் பாலாற்றை காக்க தீர்ப்பு வெளியானது

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆந்திர மாநிலத்திலிருந்து உள்ளூர் கனகநாச்சி அம்மன் ஆலயத்தின் வழியாக வேலூர் காட்பாடி வழியாக கடலில் கலக்கும் பாலாற்றை காக்க உச்ச நீதிமன்றம் இன்று சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் பாலாற்றில் மாசு ஏற்படுவதை தடுக்க முடியும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
News September 16, 2025
திருப்பத்தூர்: காவல்துறை புதிய அறிவிப்பு

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தனது சமூக வலைத்தளம் பக்கத்தில் பொதுமக்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி வாகனங்களை இயக்கும்போது செல்போன் பயன்படுத்தினால் கவனம் சிதறடிக்கப்பட்டுப் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. வாகனங்கள் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்கவும். என பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து பரவி வருகின்றது.
News September 16, 2025
திருப்பத்தூர்: வேலை தேடும் இளைஞர்கள் இங்க போங்க

திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் மாதந்தோறும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இம்மாதம் வரும் 19.09.2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. விபரங்களுக்கு மாவட்ட தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது தொலைபேசி எண் 04179-222033 வாயிலாக தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.