News November 9, 2024

அங்கன்வாடியில் ஆட்சியர் ஆய்வு

image

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இன்று, கொண்டிசெட்டிப்பட்டி, விநாயகர் தெரு அங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஒரு குழந்தையின் உடல் எடையை எடை மெஷின் மூலம் சரிபார்த்தார். இந்த ஆய்வின்போது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் என பலர் உடன் இருந்தனர்.

Similar News

News November 19, 2024

முத்தங்யிகில் காட்சி தந்த நாமக்கல் ஆஞ்சநேயர்

image

நாமக்கல் நகர் மையப் பகுதியில் உலகப் பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் கார்த்திகை மாத செவ்வாய்க்கிழமை தினத்தை முன்னிட்டு இன்று அதிகாலை நடைதிறக்கப்பட்டு 11 மணி அளவில் பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், மஞ்சள், சந்தனம், சொர்ணம் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரம், பின் மகா தீபம் காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் பெற்றனர்.

News November 19, 2024

வாகனங்கள் பொது ஏலம்

image

நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நாமக்கல் மாவட்டத்தில் மதுவிலக்கு துறையின் சார்பில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வருகின்ற 27-ஆம் தேதி பொது ஏலம் விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏலம், நாமக்கல் தலைமை அரசு மருத்துவமனை அருகே அமைந்துள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

News November 19, 2024

“துரோகம் செய்தவர்கள் வாழ்ந்த சரித்திரம் இல்லை”

image

நாமக்கல்லில் அதிமுக சார்பில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு பேசுகையில், அதிமுக-விற்கு துரோகம் செய்தவர்கள் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. அதிமுக-வை அழிக்க பலர் பல வழிகளில் வழக்கு தொடுத்தனர். அதை அனைத்தையும் தவிடு பொடியாக்கி அதிமுக -வை, இபிஎஸ் கட்டி காத்துள்ளார். திமுக பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி ஆட்சியை பிடித்தது.