News September 27, 2025
அக்.5 கோவை வருகிறார் துணை ஜனாதிபதி!

கோவை: தொண்டாமுத்தூர் பேரூர் ஆதினம் சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின் நூற்றாண்டு விழா கோவையில் அக்.5 நடைபெறுகிறது. இந்த விழாவில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்கிறார். இதற்கான ஆலோசனை கூட்டம் பேரூர் ஆதின மடத்தில் சாந்தலிங்க மருதாசல அடிகள் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினரை வரவேற்பது,உணவு வழங்குவது போன்ற நிகழ்வுகளை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது
Similar News
News September 27, 2025
கோவை: ஆதார் கார்டில் பிரச்னையா..? உடனே CALL!

கோவை மக்களே வருகிற அக்.1ஆம் தேதி முதல் உங்கள் ஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, மொபைல் எண், ஆவணங்கள் திருத்தம் செய்ய ரூ.75, தொலைந்த ஆதாரை கண்டுபிடித்தல், கலர் பிரிண்ட் அவுட்டிற்கு ரூ.40, பையோ மெட்ரிக் அப்டேட் செய்ய ரூ.125 வசூலிக்கப்படவுள்ளது. மேலும், ஆதார் சேவையில் முறைகேடு, சந்தேகங்கள், புகார்கள் போன்றவைகளுக்கு 1947 என்ற எண்ணை அழைக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE!
News September 27, 2025
குரூப் 2 தோ்வுகள்: கோவையில் 23,650 போ் எழுதுகின்றனா்

கோவை மாவட்டத்தில் ஞாயிறன்று (செப்.28) நடைபெறவுள்ள குரூப் 2 தோ்வுகளை 23 ஆயிரத்து 650 போ் எழுதுகின்றனா். கோவை மாவட்டத்தில் ஒவ்வொரு தோ்வு மையத்துக்கும் ஒரு ஆய்வு அலுவலா் வீதம் 82 ஆய்வு அலுவலா்கள் மற்றும் துணை ஆட்சியா் நிலையில் 8 பறக்கும் படை அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். தேர்வு மையங்களுக்கு செல்லும் சேர்வர்களுக்கு பேருந்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
News September 27, 2025
கோவையிலிருந்து கூடுதலாக 110 பேருந்துகள் இயக்கம்!

கோவை மாவட்டத்தில் காலாண்டு தேர்வு விடுமுறை, ஆயுத பூஜை தொடர் விடுமுறையொட்டி சேலம், திருச்சி, தேனி உள்ளிட்ட பகுதிகளுக்கு இன்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. அதன்படி காந்திபுரம், சிங்காநல்லூர் பஸ் நிலையங்களில் இருந்து இன்றும், நாளையும் இரண்டு நாட்களும் மற்றும் 30ஆம் தேதியும் வழக்கமாக இயங்கும் பஸ்களுடன் கூடுதலாக 110 பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.