News October 18, 2024
அக்.24 வரை பேருந்து மாதாந்திர பயணச் சீட்டு பெறலாம்

சென்னை மாநகர பேருந்துக்கான மாதாந்திர பயணச்சீட்டு அக்.24 வரை பெறலாம் என இன்று தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநகரப் போக்குவரத்து கழகத்தில் செயல்படும் மாதாந்திர பயணச்சீட்டு விற்பனை மையங்களில் பயண சீட்டு பெறலாம் என சென்னை போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. இதை SHARE செய்யவும்.
Similar News
News July 9, 2025
திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் அறிவிப்பு

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஜூலை 18ம் தேதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். இக்கூட்டம் அன்றைய தினம் காலை 10.30 மணியளவில் சென்னை அறிவாலயத்தில் நடைபெற உள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் முன்வைக்கப்பட வேண்டிய பிரச்னைகள் தொடர்பாக, முதல்வர் உரிய அறிவுறுத்தல்களை வழங்குவார் என தகவல் வெளியாகியுள்ளது.
News July 9, 2025
சிறுமிக்கு தொல்லை வாலிபர் கைது

சென்னை மணலி புதுநகரில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற முரளி என்பவர் கைது செய்யப்பட்டார். வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை சாக்லேட், பொம்மை தருவதாகக் கூறி வீட்டிற்கு அழைத்துச் சென்று அவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அக்கம் பக்கத்தினர் அளித்த புகாரின் பேரில் முரளி கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
News July 8, 2025
காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளராக திருநங்கை தேர்வு

இன்று ராயப்பேட்டை, சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற நிகழ்வில், திருநங்கை சரண்யா தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸின் மாநில பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருநங்கை இவர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை பொன்னாடை அணிவித்து சரண்யாவை வாழ்த்தினார். காங்கிரஸ் கட்சியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.