News October 17, 2024

அக்.19ல் பொது விநியோக திட்ட முகாம்

image

பொது விநியோக திட்டம் சிறப்பாக நடைபெற ஒவ்வொரு மாதமும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அக்டோபர் மாதத்திற்கான பொது விநியோகம் திட்ட சிறப்பு முகாம் 19ஆம் தேதி காலை 10 மணி முதல் 1 மணி வரை அந்தந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. எனவே இந்த சிறப்பு முகாமினை மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் சந்திரகலா கேட்டுக்கொண்டுள்ளார்.

Similar News

News August 29, 2025

ராணிப்பேட்டை: அமெரிக்காவால் தோல் தொழிலுக்கு சிக்கல்

image

ஆம்பூர், வேலூர், ராணிப்பேட்டை பகுதிகளில் இருந்து அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு தோல் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படும் நிலையில், அமெரிக்காவின் 50 சதவீத கூடுதல் வரியால், தோல் பதனிடும் தொழிற்சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் இந்திய பொருட்களின் வரவேற்பு குறைய வாய்ப்புள்ள நிலையில், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் தோல் பதனிடும் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

News August 29, 2025

கலை திருவிழாவில் அரசு மாணவர்கள் தேர்வு

image

ராணிப்பேட்டை மாவட்டம் வாழைப்பந்தல் கிராமத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் இந்த ஆண்டு கலை திருவிழாவில் சுமார் 21 மாணவ மாணவிகள் தங்களது தனி திறமைகளை வெளிப்படுத்தி தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்த மாணவர்கள் ராணிப்பேட்டையில் நடத்தப்படும் மாவட்ட அளவிலான கலைத் திருவிழாவில் கலந்து கொள்ள ஒத்திகைகள் செய்து வருகின்றனர்.

News August 28, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (ஆக.28) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசாரின் தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம்.

error: Content is protected !!