News April 8, 2025

அக்னிவீர் தேர்வில் கலந்து கொள்ள அழைப்பு

image

இந்திய ராணுவத்தால் நடத்தப்பட உள்ள அக்னிவீர் தேர்வில், வேலூர் மாவட்ட இளைஞர்கள் கலந்து கொள்வதற்கு வரும் 10ஆம் தேதிக்குள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 18 முதல் 21 வரை ஆகும். கல்வித்தகுதி 10, 12ஆம் வகுப்பு தேர்ச்சி, ITI, டிப்ளமோ தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க

Similar News

News November 4, 2025

வேலூர் துணை முதல்வரை வரவேற்ற கலெக்டர்

image

வேலூர் மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இன்று (நவம்பர் 3) வேலூருக்கு வருகை புரிந்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை ஆட்சியர் சுப்புலட்சுமி மாவட்ட எல்லையான பிள்ளையார் குப்பத்தில் புத்தகம் கொடுத்து வரவேற்றார். இதில் எஸ்பி மயில்வாகனன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News November 4, 2025

காவல்துறை இரவு ரோந்து பணி விபரம்

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பாக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு வந்து பணி செய்து வருகின்றனர். அதன்படி இன்று (நவம்பர் 03) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

News November 3, 2025

வேலூர்: தமிழக அரசின் ரூ.414 கோடி நலத்திட்ட உதவிகள்!

image

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நாளை (நவ.04) வேலூர் மாவட்டத்தில் 11.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 31 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைக்கிறார். மேலும் 17.91 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 15 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இதை தொடர்ந்து 49,021 பயனாளிகளுக்கு 414.15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்க உள்ளார். என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!