News November 1, 2025
அக்டோபர் GST வசூல் ₹1.95 லட்சம் கோடி

அக்டோபர் மாத GST வசூல் ₹1.95 லட்சம் கோடியாக உள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இது கடந்த செப்டம்பர் மாத வசூலான ₹1.89 லட்சத்தை விட 4.6% அதிகமாகும். அதேபோல், 2024 அக்டோபர் வசூலை விட 9% அதிகமாகும். தொடர்ச்சியாக கடந்த 10 மாதங்களாக GST வசூல் ₹1.8 லட்சம் கோடியை தாண்டி வருவதாகவும் நிதியமைச்சகம் கூறியுள்ளது. GST 2.0 காரணமாக எலெக்ட்ரிக் சாதனங்கள் விற்பனை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 1, 2025
இந்தியாவின் பாகுபலி கவுன்டவுன் தொடங்கியது

இஸ்ரோவின் பாகுபலி என வர்ணிக்கப்படும் CMS-03 செயற்கைக்கோளுக்கான கவுன்டவுன் தொடங்கியுள்ளது. நாளை மாலை 5:26-க்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட உள்ளது. கடற்படை, ராணுவ பணிகளுக்காக இந்த இது பயன்படுத்தப்பட உள்ளது. 4,410 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள், ₹1,600 கோடியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பிறநாடுகளின் துணை இல்லாமல், அதிக எடை கொண்ட செயற்கைக்கோளை இஸ்ரோ விண்ணில் ஏவுவது இதுவே முதல்முறை.
News November 1, 2025
‘பெண்ணை கர்ப்பமாக்கினால் ₹25 லட்சம்’

தலைப்பை பார்த்ததும் ஆச்சரியமாகவும் சற்று சபலமாகவும் இருக்கிறதல்லவா? ஆன்லைனில் வந்த இந்த செய்தியால் பணம் கிடைக்கவில்லை. மாறாக ₹11 லட்சத்தை பறிகொடுத்திருக்கிறார் புனேவைச் சேர்ந்த ஒப்பந்ததாரர். இந்த மோசடி தொடர்பாக அவர் அளித்த புகாரின்பேரில், போலீஸ் விசாரித்து வருகின்றனர். 2022 முதல் இத்தகைய மோசடிகள் அரங்கேறி வருவதாக சைபர் கிரைம் போலீஸ் எச்சரித்துள்ளது. உஷார்!
News November 1, 2025
இந்தியா ஏ அணி வெல்லுமா?

IND A உடனான பயிற்சி ஆட்டத்தில் SA A அணி, முதல் இன்னிங்ஸில் 309/10, 2-ம் இன்னிங்ஸில் 199/10 ரன்களை எடுத்தது. IND A முதல் இன்னிங்ஸில் 234/10 ரன்களை எடுத்தது. இன்றைய 3-ம் நாள் ஆட்டத்தில் 119/4 ரன்களை எடுத்துள்ள நிலையில், இன்னும் 156 ரன்கள் தேவைப்படுகின்றன. கேப்டன் பண்ட் 64* ரன்களுடன் களத்தில் உள்ளார். நாளைய கடைசி நாள் ஆட்டத்தில் இந்தியா வெல்லுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


