News March 12, 2026

அக்சரிடம் மன்னிப்பு கேட்டேன்: சூர்யகுமார்

image

T20 WC சூப்பர் 8 சுற்றில் SA-க்கு எதிரான போட்டியில் அக்சர் படேலை அணியில் சேர்க்காததற்காக அவரிடம் மன்னிப்பு கேட்டதாக சூர்யகுமார் தெரிவித்தார். அதற்காக அக்சர் தன்னிடம் கோபத்தை வெளிப்படுத்தியதாகவும் கூறினார். நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் காயம் காரணமாக அக்சர் விளையாடாத நிலையில், SA-க்கு எதிரான போட்டியில் அவருக்கு பதிலாக வாஷிங்டன் விளையாடினார். அதில் இந்தியா தோல்வி அடைந்தது.

Similar News

News April 8, 2026

போர் நிறுத்தம்… இந்தியாவுக்கு நிம்மதி

image

ஈரான் மீது அமெரிக்கா & இஸ்ரேல் நடந்தி வந்த கூட்டுத்தாக்குதல் 39 நாள்களுக்கு பிறகு தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. மேற்காசியாவில் நிலவிய இப்போரால் இந்தியா மற்றும் உலக நாடுகளுக்கான பெட்ரோல், கேஸ் உள்ளிட்ட எரிபொருள் விநியோகம் முடங்கியது. இந்நிலையில் விரைவில் ஈரான் அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதால், இனி சீரான எரிவாயு தடையின்றி கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது.

News April 8, 2026

தமிழகத்தில் 6.35 லட்சம் வாக்காளர்கள் அதிகரிப்பு

image

SIR பணிகளுக்கு முன்பு தமிழகத்தில் 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர். SIR திருத்தத்திற்கு பிறகு 5.43 கோடியாக குறைந்தது. இதன்பின்னர் பெயர் சேர்த்தல், நீக்கம் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றன. இந்நிலையில், ECI வெளியிட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 5.73 கோடி (5,73,43,291) பேர் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் 2.80 கோடி ஆண் வாக்காளர்கள், 2.93 கோடி பெண் வாக்காளர்கள் & 7,728 மூன்றாம் பாலினத்தவர்கள் உள்ளனர்.

News April 8, 2026

இன்று திமுகவில் இணைகிறார் அதிமுக EX MLA

image

கள்ளக்குறிச்சி EX MLA அழகுவேல் பாபு, அவரது கணவரும் நகர செயலாளருமான <<19523583>>பாபு <<>>சமீபத்தில் அதிமுகவில் இருந்து விலகினர். இந்நிலையில், நேற்று இரவு ரிஷிவந்தியம் திமுக MLA கொடுத்த தேநீர் விருந்தில் இருவரும் கலந்துகொண்டனர். அப்போது, தங்களது ஆதரவாளர்கள் 5000-க்கும் மேற்பட்டோருடன் இன்று ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணையவுள்ளதாக தெரிவித்துள்ளனர். <<-se>>#TNElection2026<<>>

error: Content is protected !!