News February 19, 2025

ஃபெஞ்சல் புயலால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் 

image

ஃபெஞ்சல் புயலால் சேதமடைந்த பயிர்கள் குறித்து முறையாக கணக்கெடுக்கப்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் பாதிப்பிற்குள்ளான 3.23 இலட்சம் ஹெக்டேர் பரப்பளவிலான வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கு மொத்தம் 5,18,783 விவசாயிகள் பயனடையும் வகையில் 498.80 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிடப்பட்டு, அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளார். 

Similar News

News April 21, 2025

தி.மலை ரோந்து பணி காவலர்கள் விவரங்கள் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக இன்று (ஏப்ரல்.21) இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரிகள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தங்களுடைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடிய நபர்கள் இருந்தாலோ அல்லது பாதுகாப்பின்மை பிரச்சனையை ஏற்பட்டாலோ அவர்களுடைய தொலைபேசி எண்கள் (அ) 100 என்ற எண்ணை அழைத்து புகார்களை பதிவு செய்யலாம்.

News April 21, 2025

புத்திர பாக்கியம் அருளும் வாலீஸ்வரர்

image

தி.மலை, குரங்கணில் மூட்டலில் அமைந்துள்ளது அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில். இங்கு சித்திரை மாதத்தில் குறிப்பிட்ட சில நாட்களில் சாமி மீது சூரிய ஒளி விழுகிறது. பாவ விமோசனம் பெற, சனி தோஷம் நீங்க இங்கே வழிபடலாம். திருமணம் முடிந்தவர்களும் கர்ப்பிணி பெண்களும் இங்கு உள்ள அம்பாளுக்கு வளையல் அணிவித்து பின் அதை அணிந்து கொள்கின்றனர். இதன் மூலம் புத்திர பாக்கியமும் சுகப்பிரசவமும் நடக்கும் என்பது நம்பிக்கை.

News April 21, 2025

கொளுத்தும் வெயில் தப்பிக்க எளிய டிப்ஸ்

image

திருவண்ணாமலையில், வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதில் இருந்து தற்காத்துக் கொள்ள போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பயணத்தின்போது குடிநீர் எடுத்துச் செல்லுங்கள். ORS,எலுமிச்சை சாறு, இளநீர், மோர் போன்றவற்றை குடிக்கலாம். மென்மையான பருத்தி ஆடைகளை அணியுங்கள். வெளியே செல்லும்போது காலணி, தொப்பி அணிந்து, குடை பிடித்து செல்லுங்கள். மதிய நேர வெயிலில் செல்வதை முடிந்தளவு தவிர்க்க வேண்டும். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!