News August 6, 2024
4.64 லட்சம் மாணவர்களுக்கு விரைவில் ₹5000

2022-23 கல்வியாண்டில் +2 தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு, விரைவில் ₹5000 வழங்கப்பட உள்ளது. மொத்தம் 5.16 லட்சம் பேர் தேர்வான நிலையில், முதல்கட்டமாக 4.64 லட்சம் பேருக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இதற்கான விவரங்களை எமிஸ் தளத்தில் பதிவு செய்யும் பணி நேற்றுடன் முடிந்துள்ளதால், மாணவர்களின் வங்கிக் கணக்கில் விரைவில் ₹5,000 வரவு வைக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Similar News
News December 25, 2025
களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் (PHOTOS)

இறை பாலகன் இயேசுவின் பிறப்பை கிறிஸ்தவர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். தேவாலயங்கள் மின்விளக்குகளால் ஜொலிக்க, சிறப்பு பிரார்த்தனைகளில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர். சாண்டா கிளாஸ்கள் குழந்தைகளுக்கு பிடித்தமான பரிசுகளை வழங்கி வாழ்த்துகளையும் பகிர்ந்து கொண்டனர். உலகெங்கும் களைகட்டியுள்ள கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் சில பிரத்யேக புகைப்படங்களை மேலே SWIPE செய்து பாருங்க..
News December 25, 2025
BREAKING: சஸ்பென்ஸை உடைத்தார் செங்கோட்டையன்

அதிமுகவில் EPS மீது அதிருப்தியில் உள்ள தலைவர்களை கண்டறிந்து அவர்களுடன் செங்கோட்டையன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்நிலையில், பொங்கலுக்கு பிறகு அதிமுகவில் இருந்து பல தலைவர்கள் தவெகவை நோக்கி வருவார்கள் என சஸ்பென்ஸை உடைத்துள்ளார். இதனால், யார் அந்த தலைவர்கள் என்ற பேச்சு எழுந்துள்ளது. தென் மாவட்டத்தில் இருவர், டெல்டா மற்றும் கொங்கு மண்டலத்தில் ஒருவர் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
News December 25, 2025
12th Pass போதும்.. மத்திய அரசில் 394 காலியிடங்கள்!

தேசிய பாதுகாப்பு அகாடமியில் (NDA) காலியாக உள்ள 394 பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன ➤கல்வித்தகுதி: 12-வது தேர்ச்சி ➤வயது: 18- 21 ➤சம்பளம்: பதவிக்கேற்ப மாறுபட்டது ➤தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு, அறிவுத்திறன் & ஆளுமைத் தேர்வுகள் நடைபெறும் ➤விண்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 30 ➤விண்ணப்பிக்க இங்கே <


