News April 13, 2024
பாஜகவுக்கு வாக்களித்தால் லிங்க் மூலம் ₹500?

வாட்ஸ் அப் லிங்க் மூலம் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படும் என பாஜக மோசடி செய்வதாக நெல்லை தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார் அளித்துள்ளது. மக்களவைத் தேர்தல் ஏப்.19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், பாஜகவுக்கு வாக்களித்தால் வாட்ஸ்அப் லிங்க் மூலம் ₹500 கிடைக்கும் என குறுஞ்செய்தி அனுப்புவதாக குற்றம்சாட்டிய திமுக, இது தொடர்பாக பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்துள்ளது.
Similar News
News December 26, 2025
இன்று முதல் விலை உயருகிறது

நாடு முழுவதும் இன்று( டிச.26) முதல் ரயில் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. அதன்படி, 215 கி.மீ., வரை சாதாரண வகுப்பில் பயணிப்போருக்கு கட்டண உயர்வில்லை. 215 கி.மீ.க்கு மேல் சாதாரண வகுப்பில் பயணித்தால் கி.மீ.,க்கு 1 பைசா உயரும். 215 கி.மீ.க்கு மேல் மெயில் & விரைவு ரயில்களில் பயணிப்பவர்களுக்கு கி.மீ.,க்கு 2 பைசா கட்டணம் உயர்கிறது. Non AC-ல் 500 கி.மீ பயணிக்க ₹10 கூடுதலாக வசூலிக்கப்படும்.
News December 26, 2025
திமுக நன்றி மறக்க கூடாது: ஹெச்.ராஜா

TN-ல் உள்ள பூங்காக்கள், நூலகங்களுக்கு வாஜ்பாயின் பெயரை திமுக அரசு சூட்ட வேண்டும் என ஹெச்.ராஜா வலியுறுத்தியுள்ளார். Ex-PM வாஜ்பாயின் அமைச்சரவையில் திமுக அங்கம் வகித்ததை சுட்டிக்காட்டியுள்ள அவர், அந்த நன்றியை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது என்றும் கூறியுள்ளார். ஆகையால், வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில், இதுதொடர்பான அறிவிப்பை CM ஸ்டாலின் வெளியிட வேண்டும் எனவும் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
News December 26, 2025
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு மேலும் ₹560 உயர்வு

தங்கம் விலை இன்று(டிச.26) வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹70 உயர்ந்து ₹12,890-க்கும், சவரனுக்கு ₹560 உயர்ந்து ₹1,03,120-க்கும் விற்பனையாகிறது. கடந்த 5 நாள்களில் மட்டும் சவரனுக்கு ₹3,920 என தாறுமாறாக உயர்ந்துள்ளதால் நடுத்தர மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


