News April 7, 2025
₹50 கோடி: ‘பராசக்தி’ ஒரே டீல்

‘பராசக்தி’ படத்தின் OTT உரிமத்தை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்திற்கு விற்க படக்குழு முயற்சி செய்து வருகிறதாம். உரிமத்தை ₹50 கோடிக்கு விற்க படக்குழு பேரம் பேசியதாகவும், ஆனால், ₹45 கோடிக்கு வாங்க நெட்ஃபிளிக்ஸ் முன்வந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், சொன்ன ரேட்டில் இருந்து படக்குழு பின்வாங்காத நிலையில், தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறதாம். 2026 பொங்கலுக்கு படம் ரிலீசாக உள்ளது.
Similar News
News April 8, 2025
IPL: புதிய சாதனை படைத்த புவனேஷ்வர் குமார்…!

‘ஸ்விங் கிங்’ என ரசிகர்களால் அழைக்கப்படும் புவனேஷ்வர் குமார், ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்களை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார். ஆர்சிபி அணியில் தற்போது விளையாடிவரும் அவர்(184), பிராவோவின்(183) சாதனையை தகர்த்துள்ளார். ஐபிஎல் தொடரில் ஒட்டுமொத்தமாக அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் சாஹல் (206), சாவ்லா (192) ஆகியோருக்கு அடுத்த இடத்தில் புவனேஷ்வர் குமார் உள்ளார்.
News April 8, 2025
அடுத்த விழாவுக்கு தயாராகும் அயோத்தி!

அயோத்தி அடுத்த விழாவுக்கு தயாராகி வருகிறது. சரியாக ஓராண்டுக்கு முன் பால ராமரின் பிராண பிரதிஷ்டை அயோத்தியில் கோலாகலமாக நடந்தது. இந்த சிலையை கர்நாடக சிற்பி அருண் யோகிராஜ் செதுக்கி இருந்த நிலையில், முதல் மாடியில் பிரம்மாண்ட அரச தர்பார் அமைக்கும் பணிகள் நடந்து வந்தன. தற்போது இறுதிக் கட்டத்தை எட்டிய நிலையில், அடுத்த மாதம் தர்பார் திறக்கப்படவுள்ளது.
News April 8, 2025
மாநில அரசு சொல்வதை கவர்னர் கேட்க வேண்டும்

அரசியலமைப்பின் பிரிவு 200ன் படி கவர்னருக்கு தனி அதிகாரம் உள்ளதாக கூறப்படுவது ஏற்புடையதல்ல; பொதுவான விதியின்படி கவர்னர் என்பவர் மாநில அரசின் உதவி & ஆலோசனையின்படியே செயல்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், மசோதாவுக்கு அனுமதி வழங்கலாம், நிறுத்தி வைக்கலாம், குடியரசுத் தலைவருக்கு அனுப்பலாம் ஆகிய 3 முடிவுகளை மட்டுமே கவர்னர் எடுக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளது.