News October 23, 2024
ரோஸ் மில்க் நல்லதல்ல… எச்சரிக்கும் மருத்துவர்கள்!

கேக், பஞ்சு மிட்டாய், ஐஸ் பிஸ்கெட் ஆகியவற்றை அடுத்து குழந்தைகள் விரும்பி பருகும் ரோஸ் மில்க் பானத்திலும் ஆபத்தான ரசாயனங்கள் கலக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ரோஸ் மில்க் தயாரிப்பில், erythromycin, carmoisine, ponceau 4R போன்ற செயற்கை நிறமிகளை அளவுக்கு அதிகமாக கலக்கின்றனர். மேலும், Rhodamine B என்ற நச்சு ரசாயனமும் கலக்கப்படுகிறது. இதனால் உடல்நல பாதிப்புகளும், புற்றுநோய் அபாயமும் அதிகரிக்கிறது.
Similar News
News November 25, 2025
தலைமை சொன்னால் CM ஆக தொடர்வேன்: சித்தராமையா

கர்நாடகாவில் <<18373166>>உள்கட்சி பூசல்<<>> உச்சத்தை எட்டியுள்ள நிலையில், கட்சி தலைமையின் முடிவுக்கு கட்டுப்படுவேன் என சித்தராமையா தெரிவித்துள்ளார். டிகே சிவகுமாரும் தலைமையின் முடிவுக்கு கட்டாயம் கட்டுப்பட வேண்டும் என்று கூறியுள்ள அவர், நான் முதல்வராக தொடர வேண்டும் என்று தலைமை முடிவெடுத்தால், தொடர்வேன் என்று குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டில் இருந்து ராகுல் வந்த பிறகு, இதுபற்றி முடிவெடுக்கப்படும் என கூறப்படுகிறது.
News November 25, 2025
ராசி பலன்கள் (25.11.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News November 25, 2025
புஸ்ஸி ஆனந்த், ஆதவிடம் CBI தீவிர விசாரணை

41 பேர் உயிரிழந்த கரூர் துயரம் தொடர்பாக தவெக தலைவர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார், மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்ட 5 பேரிடம் சிபிஐ தீவிர விசாரணை நடத்தியுள்ளது. சுமார் 10 மணி நேரம் நடந்த விசாரணையில் தவெக தலைவர்கள் அளித்த விளக்கத்தை சிபிஐ அதிகாரிகள் பதிவு செய்து கொண்டனர். அவர்களிடம் நாளையும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


