News April 22, 2025
குழந்தை பெற்றால் ₹4.25 லட்சம்: டிரம்ப்பின் புதிய திட்டம்

அமெரிக்காவில் மக்கள்தொகை வளர்ச்சி குறைந்து வருவதால் கவலையடைந்த அதிபர் டிரம்ப், குழந்தை பெறுவதை ஊக்குவிக்க புதிய திட்டங்களை பரிசீலித்து வருகிறாராம். அதில் ஒன்று தான் பேபி போனஸ். அதன்படி, முதல் குழந்தை பெறும்போது பேபி போனஸ் $5,000-மும் (சுமார் ₹4.25 லட்சம்), இரண்டாவது குழந்தை பெற்றால் வரிச்சலுகையும் அளிக்க திட்டமாம். இந்த தொகைக்காக அமெரிக்கர்கள் அதிக குழந்தை பெற்றுக் கொள்வார்களா என்ன?
Similar News
News March 30, 2026
நல்ல நேரம் பார்த்து வேட்புமனு தாக்கல் செய்த விஜய், ஸ்டாலின்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கியுள்ளது. இந்நிலையில், தவெக தலைவர் விஜய் பெரம்பூரிலும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூரிலும் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்தனர். காலை 10.30 மணி முதல் நண்பகல் 12 மணி வரை எமகண்டம் என்பதால், இருவரும் நல்ல நேரத்தில் 12.10 மணியளவில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். <<-se>>#TNElection2026<<>>
News March 30, 2026
திமுக ஆட்சி நடத்துச்சா, வேற எதாவது நடத்துச்சா? விஜய்

தீயசக்தி திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா என பெரம்பூர் பிரசாரத்தில் பேசிய விஜய் கேள்வி எழுப்பியுள்ளார். பெண்கள் இரவு நேரத்தில் நிம்மதியாக கழிப்பறைக்கு கூட செல்ல முடியவில்லை என்ற அவர், முதியவர்களுக்கு கூட திமுக ஆட்சியில் பாதுகாப்பில்லை என விமர்சித்துள்ளார். மேலும், 5 வருடங்களாக திமுக ஆட்சி நடத்தினார்களா அல்லது வேற எதாவது நடத்தினார்களா எனவும் சாடியுள்ளார். <<-se>>#TNEletion2026<<>>
News March 30, 2026
அண்ணாமலை விலகலா? பாஜக புறக்கணிப்பா?

அண்ணாமலை, தேர்தலில் போட்டியிடவில்லை என தலைமைக்கு கடிதம் எழுதியிருந்தார். இதனால், அவர் பாஜகவை புறக்கணித்து வருவதாக பேச்சு எழுந்தது. நேற்று, கோவையில் PM மோடி வரவேற்பு நிகழ்விலும் அவர் பங்கேற்கவில்லை. இது தொடர்பாக பேசிய வானதி, பட்டியலில் அண்ணாமலை பெயர் இருந்ததாக கூறினார். ஆனால், வரவேற்பாளர்கள் பட்டியலில் அண்ணாமலை பெயரை சேர்க்காமல் பாஜக புறக்கணித்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் பதிவிட்டு வருகின்றனர்.


