News February 25, 2025
₹3,252 கோடி நிலுவையை உடனே விடுவிக்க வேண்டும்: அமைச்சர்

100 நாள் வேலைத்திட்டத்திற்கான ₹3,252 கோடி நிலுவைத் தொகையை உடனே விடுவிக்க வேண்டும் என அமைச்சர் பெரியசாமி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். நிதி விடுவிப்பதைத் தாமதித்தால், திட்ட பணியாளர்களுக்கு குறித்த காலத்தில் ஊதியம் வழங்க முடியாமல் போவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். ஊதிய நிலுவை ₹2,400 கோடியாகவும், உட்கட்டமைப்பு நிலுவை ₹852 கோடியாகவும் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 26, 2025
ரேஷன் கார்டுடன் ஆதாரை இணைத்துவிட்டீர்களா?

ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. அவ்வாறு இணைக்காவிட்டால், ரேஷனில் பொருட்கள் வாங்க முடியாததுடன், பெயர் நீக்கப்படும் வாய்ப்புகளும் உள்ளது. குறிப்பாக, ரேஷன் கார்டில் பெயர் உள்ள அனைத்து குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண்ணும் இணைக்கப்பட வேண்டும். அரசு தரப்பில் வழங்கப்படும் மானியம் உண்மையான பயனாளிகளுக்கு சென்றடைவதை உறுதி செய்ய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
News February 26, 2025
சிவராத்திரி: பஞ்ச பூத ஸ்தலங்கள்

மகா சிவராத்திரியையொட்டி பஞ்ச பூத சிவ ஸ்தலங்களை சிலர் வழிபடுவதுண்டு. அவை [1] காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில் (நிலம்) [2] திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் (நெருப்பு) [3] திருச்சி ஜம்புகேஸ்வரர் கோயில் (நீர்) [4] தில்லை நடராஜர் கோயில் (ஆகாயம்) [5] காளஹஸ்தி திருக்காளத்தி கோயில் (காற்று). இந்த கோயில்களில் தரிசனம் செய்தால், சிவன் அருள் முழுமையாக கிடைக்கும் என்பது ஐதீகம்.
News February 26, 2025
மாநில உரிமையில் ஒன்று சேர வேண்டும்: சீமான்

அனைத்து கட்சி கூட்டம் தொடர்பான கேள்விக்கு, ‘மாநில உரிமை என்று வரும்போது எல்லோரும் சேர்ந்து நின்றுதான் ஆக வேண்டும்’ என சீமான் தெரிவித்துள்ளார். இதன் மூலம் அவர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்பது உறுதியாகியுள்ளது. மேலும், தொகுதி மறுசீரமைப்பு பிரச்னையில் ஒருமித்த குரலாக எதிர்க்க வேண்டும் எனக்கூறிய அவர், சீர்த்திருத்தம் என்ற பெயரில் சீரழிப்பதை எப்படி ஏற்க முடியும் என கேள்வி எழுப்பினார்.