News August 15, 2024
சூரிய ஒளி மின்தகடு அமைக்க ₹3000 மானியம்

மத்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் சூரிய ஒளி மின்சக்தி திட்டத்தை தமிழக மின்வாரியம் நடைமுறைப்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் வீட்டு மேற்கூரைகளில் சூரிய ஒளி மின்தகடு அமைக்க ₹3000 மானியம் வழங்கப்படுகிறது. சராசரியாக 400 – 600 யூனிட் வரை பயன்படுத்தும் நுகர்வோர், சூரியஒளி மேற்கூரை மின் சக்தி 1 கிலோ வாட் மின்சார உபகரணத்தை நிறுவும்போது மின் கட்டணத்தை குறைக்கலாம்.
Similar News
News December 31, 2025
நீலகிரி: டிகிரி போதும்.. வங்கியில் SUPER வேலை!

நீலகிரி மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 996 Specialist Cadre Officer (SCO) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News December 31, 2025
கஞ்சா இல்லை என்பது வடிகட்டிய பொய்: ஜெயக்குமார்

தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டம் இல்லை என்று <<18711448>>அமைச்சர் மா.சு.,<<>> கூறியது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் என ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். தமிழ்நாடே தலைகுனியும் வகையில் <<18693605>>திருத்தணி <<>>சம்பவம் நடைபெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சட்டம்- ஒழுங்கை சீர்குலைத்த இந்த மோசமான ஆட்சியை தூக்கி எறிய வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மக்களின் எண்ணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
News December 31, 2025
ஹாலிவுட் நடிகர் காலமானார்

பிரபல ஹாலிவுட் நடிகர் இசியா விட்லாக் ஜூனியர் (71) உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். இவர் புகழ்பெற்ற ‘The Wire’ மற்றும் ‘Veep’ சீரிஸ்களில் நடித்துள்ளார். மேலும், The Good Cop, The Last Husband ஆகிய படங்களில் நடித்தது மட்டுமின்றி, சில படங்களுக்கு எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார். இவரது மறைவுக்கு ஹாலிவுட் பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


