News August 16, 2024
முதல் நாளில் ₹26 கோடி வசூல்

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே நேற்று வெளியான ‘தங்கலான்’ படம் வசூலில் கலக்கி வருகிறது. வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் ₹26.45 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படத்திற்கு பாசிடிவ் விமர்சனம் கிடைத்துள்ளதால் வரும் நாள்களில் வசூல் மேலும் அதிகரிக்கும் என தெரிகிறது. இப்படம் எப்படி இருக்கிறது என கமெண்ட் பண்ணுங்க.
Similar News
News January 30, 2026
தமிழக தேர்தல்.. விரைவில் முக்கிய அறிவிப்புகள்

தமிழக தேர்தல் தேதி மார்ச் 2-வது வாரத்தில் வெளியாகவுள்ள நிலையில், பிப்.13 (அ) 16-ல் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. தேர்தலுக்கு முன்பு நடைபெறும் கடைசி பட்ஜெட் கூட்டத்தொடர் என்பதால், கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட திமுக அரசு திட்டமிடுகிறதாம். குறிப்பாக, மகளிர் உரிமைத் தொகையை ₹2,500 ஆக உயர்த்துவது குறித்த அறிவிப்பு இடம்பெறலாம் என்ற இனிப்பான செய்தியும் வெளியாகியுள்ளது.
News January 30, 2026
விஜய் கட்சியுடன் கூட்டணியா?

தவெகவுடன் கூட்டணி பற்றி தான் இன்னமும் எந்த முடிவுக்கும் வரவில்லை என கிருஷ்ணசாமி கூறியுள்ளார். தவெகவுடன் கூட்டணியில் புதிய தமிழகம் சேரப்போவதாக வரும் தகவலுக்கு பதிலளித்த அவர், இதுவரை தவெக தரப்பில் இருந்து யாரும் தன்னுடன் பேசவில்லை எனவும், தானும் அதற்கான முயற்சியை மேற்கொள்ளவில்லை என்றும் விளக்கமளித்துள்ளார். அத்துடன் அரசியலில் நிரந்தர எதிரியோ, நண்பனோ இல்லை எனவும் கூறியுள்ளார்.
News January 30, 2026
BREAKING: பிப்.5-ல் அமைச்சரவைக் கூட்டம்

CM ஸ்டாலின் தலைமையில் வரும் 5-ம் தேதி அமைச்சரவைக் கூடுகிறது. பிற்பகல் 12 மணிக்கு தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில், இடைக்கால பட்ஜெட் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.


