News March 29, 2025
மக்களிடம் கொள்ளை போன ₹22,000 கோடி மீட்பு: பிரதமர்

மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ₹22,000 கோடி மீட்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இரவும், பகலும் விமர்சிக்கப்படும் ED-யால் இப்பணம் மீட்கப்பட்டுள்ளதாகவும், அப்பணத்தை திருடப்பட்டவர்களிடமே திரும்ப ஒப்படைத்து விட்டதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், பொதுமக்களிடம் கொள்ளை அடித்தவர்கள், அதை மக்களிடமே திருப்பி கொடுக்க நேரிடும் எனவும் எச்சரித்துள்ளார்.
Similar News
News January 8, 2026
நெயில் பாலிஷ் பிரியர்களுக்கு எச்சரிக்கை!

நெயில் பாலிஷ் என்றால் பெண்களுக்கு அலாதி பிரியம். ஆனால் இதற்கு ஐரோப்பிய நாடுகளில் தடை உள்ளது என்பது எத்தனை பேருக்கு தெரியும். குறிப்பாக ஜெல் நெயில் பாலிஷ் வகைகளில் உள்ள ஃபார்மால்டிஹைடு, தொலுவென் போன்றவை புற்றுநோயை உண்டாக்கும் கெமிக்கல்கள் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். மேலும் அதில் உள்ள ரசாயனம் ஸ்கின்னுக்குள் ஊடுருவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் ஆய்வில் கண்டறியப்பட்டு இருக்கிறது.
News January 8, 2026
இந்தியர்களுக்கான விசாவை நிறுத்தி வைத்த வங்கதேசம்

முஸ்தஃபிசூர் விவகாரம், இந்துக்கள் மீதான தாக்குதல் உள்ளிட்டவையால் இந்தியா வங்கதேச உறவில் சிக்கல் எழுந்துள்ளது. இதனிடையே இந்தியர்களுக்கான டூரிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு விசாக்களை வங்கதேசம் நிறுத்தி வைத்துள்ளது. வணிகம், வேலைவாய்ப்புக்கு மட்டும் விசா வழங்கப்படுவதாக அந்நாட்டின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, மும்பை, கவுகாத்தி உள்ளிட்ட இடங்களில் அந்நாட்டு தூதரகங்கள் செயல்படுவது குறிப்பிடதக்கது.
News January 8, 2026
ரத்தன் டாடா பொன்மொழிகள்

*சிறந்த வேலை செய்ய ஒரே வழி நீங்கள் செய்யும் வேலையை நேசிப்பது தான். *வேகமாக நடக்க விரும்பினால் தனியாக நட. ஆனால் நீண்ட தூரம் நடக்க விரும்பினால், பிறருடன் ஒன்றாக நட. *நல்ல சேவையை வழங்கினால், நல்ல வியாபாரம் கிடைக்கும் என்று நான் நம்புகிறேன். *எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சிறப்பாகவும், சரியாகவும் செயல்பட வேண்டும். அதில் சமரசம் செய்துகொள்ள கூடாது.


