News June 18, 2024
விவசாயிகள் வங்கிக் கணக்கில் ₹2000

PM கிஷான் திட்டத்தில் நாடு முழுவதும் தகுதியான விவசாயிகளுக்கு, ஆண்டுதோறும் 3 தவணையாக ₹6000 வழங்கப்படுகிறது. இதுவரை 16 தவணைகள் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் 3ஆவது முறையாக பதவியேற்றதும், 17ஆவது தொகையை விடுவிப்பதற்கான கோப்பில் பிரதமர் மோடி கையெழுத்திட்டார். இதைத் தொடர்ந்து, இன்று (ஜூன் 18) விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ₹2000 வரவு வைக்கப்பட உள்ளது.
Similar News
News March 26, 2026
மயிலாடுதுறை: இரவு ரோந்து பணி போலீசார் விபரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (மார்ச்.25) இரவு 10 முதல் இன்று (மார்ச்.26) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News March 26, 2026
PNG இணைப்புக்கு தொடர்பு எண்கள் அறிவிப்பு

PNG இணைப்பை பெற விருப்பமுள்ள வணிக & தொழில்துறையினர் CGD நிறுவனங்களை தொடர்பு கொள்ளலாம் என TN அரசு தெரிவித்துள்ளது. சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு (Torrent Gas: 1800-2125-6789), காஞ்சி, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு (AG&P/Think Gas: 1800-202-2999), திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு (Adani Total Gas: 079-47545252) தொடர்பு கொள்ளவும். இதர மாவட்டங்களுக்கு இந்த <
News March 26, 2026
தாமரைக்கு வாக்களித்து பாவம் செய்யாதீர்கள்: கருணாஸ்

தமிழக வரலாற்றில் பாஜகவுக்கு இவ்வளவு சீட் கொடுத்ததாக தனக்கு ஞாபகமில்லை என கருணாஸ் கூறியுள்ளார். அதிமுகவிடம் சீட் வாங்கிய பாஜக, சிறிய கட்சிகளை தாமரை சின்னத்தில் நிற்க வைக்கிறது; தேர்தலுக்கு பிறகு அவர்களின் வாக்கு சதவீதத்தையும் தங்கள் கணக்கில் அது சேர்த்துவிடும் என விமர்சித்துள்ளார். வரும் தேர்தலில் தாமரைக்கு வாக்களித்து, பாவகாரியம் செய்து விடாதீர்கள் எனவும் எச்சரித்துள்ளார். <<-se>>#TNElection2026<<>>


