News November 2, 2025
₹2,000 நோட்டுகள்.. ரிசர்வ் வங்கி முக்கிய தகவல்

₹2,000 நோட்டுகள் குறித்து ரிசர்வ் வங்கி முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. ₹5,817 கோடி மதிப்பிலான ₹2,000 நோட்டுகள் வங்கிகளுக்கு இன்னும் திரும்பவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்களிடம் ₹2,000 நோட்டு இருந்தால் RBI சென்னை அலுவலகத்தில் கொடுத்து மாற்றலாம். அடையாள அட்டை உள்ளிட்டவற்றுடன் சென்று பணத்தை டெபாசிட் செய்யலாம். தபால் நிலையம் மூலமும் RBI-க்கு ₹2000 நோட்டுகளை அனுப்பலாம். SHARE IT
Similar News
News December 11, 2025
விடுமுறை.. நாளை முதல் 3 நாள்களுக்கு HAPPY NEWS

வார விடுமுறையையொட்டி, மக்களின் வசதிக்காக அரசு சிறப்பு பஸ்களை அறிவித்துள்ளது. அந்த வகையில், நெரிசலின்றி ஊர்களுக்குச் செல்ல, நாளை முதல் டிச.14 வரை சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து சுமார் 1,000 பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன. இதுவரை 20,000 பேர் வரை டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். www.tnstc.in இணையதளம் (அ) TNSTC செயலியில் டிக்கெட் முன்பதிவு செய்து உங்கள் பயணத்தை ஈசியாக்குங்க நண்பர்களே!
News December 11, 2025
இந்த மர்ம உயிரினத்தை பற்றி தெரியுமா?

2008-ல் USA-வின் மொன்டாக் பகுதிக்கு அருகில் உள்ள ஒரு கடற்கரையில், அடையாளம் தெரியாத ஒரு மர்ம உயிரினம் கரை ஒதுங்கியது. அழுகிய நிலையில், பார்ப்பதற்கு விசித்திரமாக இருந்ததால், இது ‘மொன்டாக் மான்ஸ்டர்’ என அழைக்கப்பட்டது. பெரும்பாலான நிபுணர்கள், இது ஒருவகையான Raccoon (அனில் கரடி) ஆக இருக்கலாம் என கூறியுள்ள நிலையில், இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இந்த மர்ம விலங்கு என்னவா இருக்கும்னு நீங்க நினைக்கறீங்க?
News December 11, 2025
பாரதி புகழை எட்டுத்திக்கும் கொண்டு சேர்ப்போம்: CM

மகாகவி பாரதியாரின் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு தமிழக அரசின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. சிந்தனை, சொல், செயல் என அனைத்திலும் புதுமையை நோக்கி விரைந்து தமிழ்ச் சமூகத்துக்குப் புதுநெறி காட்டிய புலவன் பாரதியின் புகழை எட்டுத்திக்கும் கொண்டு சேர்ப்போம் என CM ஸ்டாலின் X-தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் பாரதியின் பெயரால் தமிழகத்தில் நடைபெறும் திட்டங்களை குறிப்பிட்டு பெருமிதம் தெரிவித்துள்ளார்.


