News March 17, 2025
கிறிஸ் கெயில் பெயரில் ₹2.8 கோடி மோசடி!

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில் பெயரை பயன்படுத்தி தன்னிடம் ₹2.8 கோடி மோசடி செய்யப்பட்டிருப்பதாக 60 வயது மூதாட்டி புகார் தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபரான அவர், காபி பவுடர் கம்பெனிக்கு கிறிஸ் கெயில் தான் புரமோட்டராக இருந்து முதலீடுகளை ஈர்ப்பதாக கூறி மோசடி செய்ததாக கூறியுள்ளார். இதில் தனது சகோதரர் உள்பட 6 பேர் உடந்தையாக இருந்ததாகவும் புகார் அளித்துள்ளார்.
Similar News
News March 18, 2025
மார்ச் 18: வரலாற்றில் இன்று!

*1922 – ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்ட மகாத்மா காந்தி, 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார். 2 ஆண்டுகளில் விடுதலையானார்.
*1858 – டீசல் எஞ்ஜினை கண்டுபிடித்த ருடால்ஃப் டீசல் பிறந்த தினம்.
*இந்திய ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலை தினம்.
*உலக மறுசுழற்சி தினம்.
*ஆசிரியர் நாள் (சிரியா)
*ஆண்கள் மற்றும் போர் வீரர்கள் நாள் (மங்கோலியா)
News March 18, 2025
வாழ்வாதாரத்திற்காக பல மொழிகள் கற்கலாம்: AP CM

வாழ்வாதாரத்திற்காக பல மொழிகளை கற்பது அவசியம் என ஆந்திரா CM சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். புதிய கல்விக் கொள்கையை ஆதரித்தும், மும்மொழியின் அவசியத்தை வலியுறுத்தியும் ஆந்திரா சட்டப்பேரவையில் பேசிய அவர், மொழி என்பது வெறுப்பதற்காக அல்ல என்றும், ஹிந்தி தேசிய மொழி, ஆங்கிலம் சர்வதேச மொழி எனவும் குறிப்பிட்டார். TNஇல் உள்ள முக்கிய கட்சிகள் மும்மொழி கொள்கையை எதிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
News March 18, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: தீவினையச்சம் ▶குறள் எண்: 210
▶குறள்: அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின்.
▶பொருள்: வழிதவறிச் சென்று பிறர்க்குத் தீங்கு விளைவிக்காதவர்க்கு எந்தக் கேடும் ஏற்படாது என்பதை அறிந்து கொள்க.