News October 11, 2025

தீபாவளி பரிசாக ₹18,000.. தமிழக அரசு HAPPY NEWS

image

தீபாவளியையொட்டி கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு பண்டிகை கால முன்பணத்தை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. அதன்படி, தொடக்க வேளாண் கூட்டுறவு, நகர கூட்டுறவு, ஊரக வளர்ச்சி வங்கிகளின் பணியாளர்களுக்கு தலா ₹18,000 வழங்கப்படும். மாநில கூட்டுறவு வங்கி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர்களுக்கு தலா ₹24,000 வழங்கப்படும். மாநில தலைமை கூட்டுறவு வங்கி அலுவலர்களுக்கு தலா ₹30,000 கிடைக்கும்.

Similar News

News December 8, 2025

வங்கியில் 996 காலியிடங்கள், ₹51,000 சம்பளம்: APPLY

image

SBI வங்கியில் காலியாக உள்ள 996 Specialist Officer பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சம்பளம்: ₹51,000. வயது வரம்பு: 20 – 35 வரை. தேர்வு: Personal / Telephonic / Video interview. விண்ணப்பிக்க கடைசி நாள்: டிச.23. விண்ணப்பிக்க இங்கே <>க்ளிக்<<>> செய்யுங்கள். வேலை தேடுவோருக்கு SHARE THIS.

News December 8, 2025

2026-ல் DMK – TVK இடையேதான் போட்டி: பெங்களூரு புகழேந்தி

image

ஜெ., நினைவிடத்தில் 4 பிரிவுகளாக அதிமுகவினர் மரியாதை செலுத்தியது வேதனை அளிப்பதாக பெங்களூரு புகழேந்தி தெரிவித்துள்ளார். அதிமுகவை அழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் EPS செயல்படுவதாகவும், OPS எங்கு சென்றாலும் இறுதியில் பாஜகவில்தான் சேருவார் என்றும் சாடினார். மேலும், தற்போது அதிமுகவை விட திமுக, தவெகவே முன்னிலையில் இருக்கிறது என்றும் 2026-ல் DMK – TVK இடையேதான் போட்டி எனவும் தெரிவித்துள்ளார்.

News December 8, 2025

சிறுத்தை சிவா இயக்கத்தில் மீண்டும் அஜித்!

image

வீரம், வேதாளம், விஸ்வாசம் என வரிசையாக ஹிட் படங்களை கொடுத்துள்ள அஜித் – சிறுத்தை சிவா காம்போ மீண்டும் இணைந்துள்ளது. தொடர்ந்து அஜித்தின் ‘Good Book’-ல் இருக்கும் சிறுத்தை சிவா, அவருக்கு ஒரு விளம்பர படத்தை இயக்கவுள்ளார். ரிலையன்ஸ் நிறுவனத்தின் ‘Campa Cola’ விளம்பரத்தில் அஜித் நடிக்க அதைதான் சிறுத்தை சிவா இயக்கி இருக்கிறாராம். இந்த விளம்பரம் விரைவில் வெளிவரும் எனவும் கூறப்படுகிறது.

error: Content is protected !!