News March 15, 2025
பயிர்க் கடன் தள்ளுபடிக்கு ₹1,472 கோடி ஒதுக்கீடு: அமைச்சர்

2025 – 26 நிதியாண்டில் விவசாயிகளின் பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்ய ₹1,472 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளில் ₹10,346 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும், கரும்பு விவசாயிகளுக்கான சிறப்பு ஊக்கத்தொகை ₹215லிருந்து ₹349ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றும் வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.
Similar News
News March 16, 2025
திருமணமான ஆண்களுக்கு BAD NEWS

கல்யாணமான ஆண்களுக்கு தொப்பை வளர்வதை நாம் கிண்டல் செய்வதுண்டு. அது உண்மைதான் என்கிறது போலந்து நாட்டு ஆய்வு. பேச்சிலர் ஆண்களை விட, திருமணமான ஆண்களுக்கு உடல்பருமன் அதிகரிக்கும் வாய்ப்பு 3.2 மடங்கு அதிகமாகிறதாம். ஆனால், பெண்கள் குண்டாவதற்கும் திருமணத்துக்கும் பெரிய தொடர்பில்லையாம். அதனால் என்ன என்கிறீர்களா.. உடல்பருமன் அதிகரித்தால் BP முதல் கிட்னி பிரச்சனை வரை எண்ணற்ற நோய்கள் வரும் ஆபத்து அதிகம்.
News March 16, 2025
பாஜகவுக்கு புதிய தலைவர்.. தொடர்ந்து இழுபறி

பாஜக புதிய மாநிலத் தலைவர் யார் என மார்ச் மாத மத்தியில் அறிவிக்கப்படலாம் என முதலில் கூறப்பட்டது. ஆனால் அதற்கான அறிகுறியே இதுவரை இல்லை. தமிழக பாஜக தலைவர்களும் அதுகுறித்து வாய் திறந்து பேசவேயில்லை. அண்ணாமலை வழக்கம் போல தனது தலைவர் பதவிக்குரிய வேலையை செய்து வருகிறார். இதை சுட்டிக்காட்டும் அரசியல் ஆர்வலர்கள், மாநிலத் தலைவர் பதவியில் அண்ணாமலை நீடிக்கவே வாய்ப்பிருப்பதாக கூறுகின்றனர்.
News March 16, 2025
ரூ.350 நோட்டு வெளியீடா?

ரூ.200 தாள் நிறம் போல ரூ.350 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக படங்களுடன் சமூகவலைதளங்களில் செய்தி பரவி வருகிறது. இது உண்மையா என பிரபல செய்தி நிறுவனத்தின் உண்மை சரிபார்ப்பு குழு ஆய்வு செய்தது. அதில் அந்த செய்தி பொய்யான செய்தி என்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து ரூ.350 நோட்டு தொடர்பாக வெளியாகும் செய்தியை நம்ப வேண்டாம் என்று மக்களை அக்குழு கேட்டுக் கொண்டுள்ளது.