News December 5, 2024
ரேஷன் அட்டைக்கு ₹10,000 வேண்டும்: பிரேமலதா

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் கார்டுக்கு தலா ₹10,000 நிவாரணம் வழங்க பிரேமலதா வலியுறுத்தியுள்ளார். மழையால் பாதிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி, விழுப்புரத்தை பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கினார். பின்னர் பேசிய அவர், 50% பாதிப்புகள் தான் ஊடகங்களில் வெளியாகியுள்ளது. எனவே முறையாக ஆய்வு செய்து விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ₹1 லட்சம் வழங்கத் அரசிடம் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News November 28, 2025
77 அடி உயர ராமர் சிலையை திறந்து வைக்கிறார் PM மோடி

கோவாவில் உள்ள சமஸ்தான கோகர்ண பர்தகலி ஜீவோத்தம் மடத்தில், இந்தியாவின் மிக உயரமான ராமர் சிலையை இன்று PM மோடி திறந்து வைக்கிறார். 77 அடி உயரம் கொண்ட இந்த வெண்கல சிலையை திறந்து வைக்கும் மோடி, சிறப்பு அஞ்சல் தலை & நாணயத்தையும் வெளியிடவுள்ளார். இந்த சிலையை, குஜராத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலையை வடிவமைத்த சிற்பி ராம் சுதார் உருவாக்கியுள்ளார்.
News November 28, 2025
கோலமாவு கோகிலா கதையா ரிவால்வர் ரீட்டா?

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ரிவால்வர் ரீட்டா’ படம், நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ போன்று உள்ளதாக தகவல்கள் பரவின. இது தனக்கும் முதலில் தோன்றியதாக கீர்த்தி கூறியுள்ளார். இதனால், இப்பட ஷூட்டுக்கு முன்பு மீண்டும் கோலமாவு கோகிலா படத்தை பார்த்ததாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், இந்த படம் ஒரே நாளில் நடக்கும் சம்பவங்கள் என்று விளக்கமளித்தார். இப்படம் இன்று ரிலீஸாகிறது.
News November 28, 2025
ரெட் அலர்ட்.. இன்று பள்ளிகளுக்கு விடுமுறையா?

‘டிட்வா’ புயல் எதிரொலியாக இன்று (நவ.28) சில மாவட்டங்களுக்கு <<18407894>>ரெட் அலர்ட்<<>> விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கனமழை எச்சரிக்கையை பொறுத்து, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து கலெக்டர்கள் முடிவெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் இன்று மழையை பொறுத்து விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது. அப்படி இல்லையெனில், குடை, ரெயின் கோட் ஆகியவற்றை மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள். Stay safe


